போலி சான்றிதழ்களைப் பயன்படுத்தி மருத்துவ நிலையங்களை நடத்தும் போலி வைத்தியர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கிடையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது .
குறிப்பாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் வைத்தியர்களுக்கு வழங்கப்படும் உத்தியோகபூர்வ அடையாளத்துடன் கூடிய ஸ்டிக்கரை வாகனங்களில் ஒட்டி சிலர் சட்ட விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர் .
அத்துடன், சான்றிதழ்கள், தரமற்ற மருந்துகள், வாசனைத் திரவியங்கள் மற்றும் பல்வேறு வகையான அழகுசாதனப் பொருட்கள் விற்பனை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் பொலிஸார் கவனம் செலுத்தியுள்ளனர் .
போலி சான்றிதழ்களைப் பயன்படுத்தி மருத்துவ நிலையங்களை நடத்துபவர்கள் மற்றும் வைத்தியர்கள் போல் நடித்து சில சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM