(நெவில் அன்தனி)
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி, டொலரன்ஸ் மைதானத்தில் வெள்ளிக்கிழமை (03) இரவு நடைபெற்ற ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றின் ஏ குழுவுக்கான கடைசி லீக் போட்டியில் ஐக்கிய அமெரிக்காவை 18 ஓட்டங்களால் இலங்கை வெற்றிகொண்டது.
இதன் மூலம் தனது 4 போட்டிகளிலும் வெற்றியீட்டிய இலங்கை, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாவது அரை இறுதியில் ஐக்கிய அரபு இராச்சியத்தை எதிர்த்தாடவுள்ளது.
இந்தப் போட்டியில் வெற்றிபெற்றால் மாத்திரமே பங்களாதேஷில் இந்த வருடம் நடைபெறவுள்ள மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை பங்குபற்ற முடியும்.
டொலரன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 123 ஓட்டங்களைப் பெற்றது.
துடுப்பாட்டத்தில் விஷ்மி குணரட்ன (25), ஹன்சமா கருணாரட்ன (25 ஆ.இ.), ஹர்ஷித்தா சமரவிக்ரம (23), நிலக்ஷிகா சில்வா (21), அனுஷ்கா சஞ்சீவனி (15 ஆ.இ.) ஆகியோர் சிறந்த பங்களிப்பை வழங்கினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அமெரிக்கா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 105 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.
துடுப்பாட்டத்தில் டிஷா திங்ரா (28), இந்தியாவின் பெங்களூரைப் பிறப்பிடமாகக் கொண்ட அணித் தலைவி சிந்து ஸ்ரீதர்ஷா (27), பூஜா ஷா (20 ஆ.இ.) ஆகியோர் திறமையை வெளிப்படுத்தினர்.
பந்துவீச்சில் சமரி அத்தபத்து 4 ஓவர்களில் 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகியானார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM