அக்குறணை பிரதேச சபையினால் கடந்த நான்கு வருடங்களாக பாதைகள் செப்பனிடப்படாமலும் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படாமலும் புறக்கணிக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டி அக்குறணை நகரில் ஜும்ஆத் தொழுகையை அடுத்து வெள்ளிக்கிழமை (03) ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.
நீர் வழங்கல் வேலைத்திட்டத்துக்காக கடந்த நான்கு வருடங்களுக்கு முன் வெட்டப்பட்ட பாதைகள் இன்னும் செப்பனிடப்படாமல் இருப்பதையும், கழிவுகள் சீரான முறையில் ஒதுக்கப்படாமலும் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் கவனத்தில் கொள்ளப்படாமலும் புறக்கணிக்கப்பட்டு வருவதையும் கண்டித்து அக்குறணை பிரதேச மக்கள் பதாதைகளை ஏந்திக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அக்குறணை பிரதேச சபைக்கு அதிகளவிலான வரிப்பணம் அக்குறணை நகரிலிருந்து அறவிடப்பட்ட போதிலும் அபிவிருத்தியின்போது அக்குறணை பிரதேசம் புறக்கணிக்கப்பட்டு வருவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் பிரதேச மக்கள் அனைவரும் கையொப்பமிட்டு பிரதேச சபையின் செயலாளரிடம் தமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM