(நெவில் அன்தனி)
இலங்கையில் விளையாட்டுக்களை அரசியலற்றதாக்கும் வகையிலான ஒழுங்குமுறை ஒன்றை விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ வெள்ளிக்கிழமை (03) அமுல்படுத்தினார்.
இந்த ஒழுங்குமுறையை உத்தியோகபூர்வமாக ஆக்கும் வகையில் அதற்கான ஆவணத்தில் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கையெழுத்திட்டார்.
2024 ஒழுங்குமுறை இலக்கம் 1 என அடையாளப்படுத்தப்பட்ட ஆவணத்தையே அமைச்சர் கையெழுத்திட்டு அமுல்படுத்தினார்.
தேவை எழும்போது 73 வகையான விளையாட்டுத்துறை சங்கங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதுற்கான அதிகாரத்தை விளையாட்டுத்துறை திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஷமல் பெர்னாண்டோவுக்கு அமைச்சர் இதன் மூலம் வழங்கியுள்ளார்.
இது 1973 ஆம் ஆண்டின் 25ஆம் இலக்க விளையாட்டுத்துறை சட்டத்தின்படி விளையாட்டுத்துறை பணிப்பாளர் நாயகத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட 73 தேசிய விளையாட்டுச் சங்கங்களின் தேவைகளை உள்ளடக்கியதாக இந்த ஒழுங்குமுறை அமைந்துள்ளது.
அத்துடன் தேவைப்படும்போது அந்த சங்கங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பணிப்பாளர் நாயகத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல், விளையாட்டுத்துறை பங்குதாரர்களின் அனைத்து குறைகளையும் கேட்டறிந்து நாட்டின் விளையாட்டு நலன்களுக்காக அவர்களை வழிநடத்தும் வகையில் குறைகேள் அதிகாரி ஒருவரின் சேவையையும் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அறிமுகப்படுத்தியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM