சினிமாவை வைத்து சினிமா எடுத்தால் வெற்றி பெறாதா..? - நடிகர் கவின்

03 May, 2024 | 06:49 PM
image

'சினிமாவை வைத்து சினிமா எடுத்தால் ஓடாது என பொதுவாக சொல்வார்கள். ஆனால் 'ஸ்டார்' திரைப்படம் இந்த சென்டிமென்ட்டை உடைத்தெறிந்து வெற்றி பெறும்' என நடிகர் கவின் தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'ஸ்டார்' திரைப்படம் மே பத்தாம் திகதியன்று பட மாளிகைகளில் வெளியாகிறது. இதனை முன்னிட்டு பட குழுவினர் சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டேலில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

அதன் போது கவின் பேசுகையில், '' இந்த படத்தின் கதையை இயக்குநர் இளன் எந்தவித குறிப்புகளும் இன்றி இதயத்தில் இருந்து மூன்று மணி நேரம் பொறுமையாகவும், விரிவாகவும் சொன்னார். அவர் சொன்ன கதையில் உயிர்ப்பு இருந்தது. இதனால் பெரிதாக எதைப் பற்றியும் யோசிக்காமல் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

என் மீது இயக்குநர் மற்றும் படக்குழுவினர் வைத்த நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறேன் என நினைக்கிறேன். இந்தப் படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைத்து நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

சினிமாவை வைத்து சினிமா எடுத்தால் ஓடாது என பொதுவாக திரையுலகில் சொல்வார்கள். இது எந்த அளவிற்கு உண்மை என எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொருத்தவரை படம் நன்றாக இருந்தால் ஓடும். இதற்கு பல உதாரணங்களை கூறலாம். எனக்கு ரசிகர்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. இந்த திரைப்படம் வெளியாகி வசூலித்து வெற்றி பெற்றால்... சினிமாவை வைத்து சினிமா எடுத்தால் ஓடும் என்ற பட்டியலில் இந்த 'ஸ்டார்' திரைப்படம் இடம்பெறும் என நம்புகிறேன் இதற்காக இறைவனை பிரார்த்திக்கிறேன் ' என்றார்.

இத்திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்களிடத்தில் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. கவினின் பேச்சும் படத்தை பார்க்க வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

'கர' நிச்சயமாக பிளாக் பஸ்டர் ஹிட்டாகும்-...

2026-04-20 16:24:37
news-image

நடிகர் கயல் சந்திரன் நடிக்கும் 'சிங்கா'...

2026-04-20 16:07:46
news-image

நடிகர் விராட் கர்ணா நடிக்கும் 'நாக...

2026-04-20 14:57:17
news-image

ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் 'மகாவதார் பரசுராம்'...

2026-04-20 14:52:51
news-image

நடிகை சாக்ஷி அகர்வால் நடிக்கும் 'தீயோர்...

2026-04-20 14:49:08
news-image

நடிகர் காளி வெங்கட் நடிக்கும் புதிய...

2026-04-20 14:12:39
news-image

மாஸ்டர் மகேந்திரன் நடிக்கும் 'கரா' படத்தின்...

2026-04-20 14:08:08
news-image

விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்தின்...

2026-04-18 16:25:07
news-image

ரன்பீர் கபூர்- அலியா பட் -...

2026-04-18 16:22:09
news-image

சியான் 63' படத்திற்காக மீண்டும் இணையும்...

2026-04-18 16:19:40
news-image

சாதனை படைத்து வரும் நடிகர் நிகில்...

2026-04-18 16:03:24
news-image

கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட்ட ராணவ் நடிக்கும்...

2026-04-18 15:58:37