உள்நாட்டு ரயில் சேவையில் முதன் முறையாக , தானியங்கி ரயிலை சீனா அறிமுகப்படுத்தவுள்ளது. 

உலக ரயில் சேவைகளில் சீனா பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றது. அதற்கேற்றாற்போல் புல்லட் ரயில் மற்றும் சுரங்க ரயில் சேவைகள் பெரும் வளர்ச்சியடைந்துள்ளது. 

இந்நிலையில் சீனாவின் சுரங்க ரயில் சேவையில் சாரதி இல்லாத தானியங்கி ரயில் சேவையை துவங்குவதற்கான நடவடிக்கைகளை தலைநகர் பெய்ஜிங்கில் தொடங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

மேலும் பெய்ஜிங் நகரிலிருந்து பாங்ஷான் நகரம் வரையுள்ள சுமார் 16.6 கிலோமீற்றர் தூரத்திற்கு, சாரதியில்லாமல் இயங்கும் வகையில் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டு வருவதோடு, இவ்வருட இறுதிக்குள் குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக சீன ரயில்வே பாதைகள் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.