தனுஷ் நடிக்கும் 'குபேரா' படத்தில் நாகார்ஜுனாவின் கேரக்டர் லுக் வெளியீடு

03 May, 2024 | 07:16 PM
image

தனுஷ்- நாகார்ஜுனா இணைந்து கதையின் நாயகர்களாக நடிக்கும் 'குபேரா' படத்தில் நாகார்ஜுனாவின் கதாபாத்திர தோற்ற காணொளி மற்றும் புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது.

தேசிய விருது பெற்ற தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் 'குபேரா' திரைப்படத்தில் தனுஷ், நாகார்ஜுனா, ரஷ்மிகா மந்தானா, ஜிம் ஷர்ப் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு 'ராக் ஸ்டார்' தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்தத் திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சுனில் நரங் மற்றும் புஷ்கர் ராம் மோகன் ராவ் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள். இந்த திரைப்படத்தை சோனாலி நரங் வழங்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இப்படத்தில் தனுஷ் நடிக்கும் கதாபாத்திரத்தின் தோற்ற காணொளி வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் மற்றொரு கதையின் நாயகனாக நடிக்கும் நாகார்ஜுனாவின் கதாபாத்திர தோற்ற காணொளி எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் இருந்தது.

இந்நிலையில் படக் குழுவினர் நாகார்ஜுனா நடிக்கும் கதாபாத்திரத்தின் தோற்ற காணொளியை வெளியிட்டிருக்கிறார்கள். இது ரசிகர்கள் எளிதில் யூகிக்காத வகையில் இருப்பதாலும், வியப்பை ஏற்படுத்தி இருப்பதாலும் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

தனுஷ் -நாகார்ஜுனா ஆகியோரைத் தொடர்ந்து இப்படத்தில் நடித்திருக்கும் நடிகை ரஷ்மிகா மந்தானாவின் கதாபாத்திரத் தோற்ற காணொளி விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right