இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் ஆரம்பமாகியுள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்றுள்ள இலங்கை அணி களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

இரு அணிகளுக்கும் இந்த தொடர் முக்கியமானதாக அமைந்துள்ளது.

ஏனெனில் 2019 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக்கிண்ண போட்டிக்கு நேரடியாக தெரிவுசெய்யப்படுவதற்கு இந்த தொடரின் வெற்றி முக்கியத்துவம் வாய்ந்ததாக காணப்படுகின்றது.

இலங்கை அணி :

உபுல் தரங்க (அணித் தலைவர்), தனுஷ்க குணதிலக, குசால் மெண்டிஸ், தினேஸ் சந்திமால், அசேல குணரட்ன, சசித்ர பத்திரன, திசர பெரேரா, சுராங்க லக்மால், லக்ஷான் சந்தகன், மிலிந்த சிறிவர்தன, லஹிரு குமார

பங்களாதேஷ் அணி :

தமிம் இக்பால், சௌமிய சர்கார், சபீர் ரஹ்மான், முஸ்தபஹுர் ரஹ்மான், கசிப் அல் ஹசன், மஹமதுல்லா, மொஸ்டாக் ஹுசைன், மெஹிதி ஹசன், மஸ்ரபீ மொர்டஷா (அணித் தலைவர்) டஸ்கின் அஹமட், முஸ்தபிஹுர் ரஹமான்.