நானுஓயா வீதியில் திடீரென பற்றி எரிந்த முச்சக்கரவண்டி!

03 May, 2024 | 05:34 PM
image

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

இச்சம்பவம் இன்று (03) பகல்  இடம்பெற்றுள்ளது.

நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி சென்று கொண்டிருந்த போதே முச்சக்கர வண்டி தீ பிடித்து எரிந்துள்ளது.

முச்சக்கரவண்டியினை வீதியோரத்தில் நிறுத்தி விட்டு அருகில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு சென்று உணவு பொருட்கள் கொள்வனவு செய்து கொண்டு வந்து மீண்டும் முச்சக்கர வண்டியினை இயக்க முற்பட்ட போது திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

தீப் பிடித்தமைக்கான காரணம் இதுவரை  கண்டறியப்படவில்லை எனவும்  இயந்திரப் பகுதியில் பெற்றோல் கசிவு ஏற்பட்டு தீப் பிடித்திருக்கலாம் என பொலிஸார் தெரிவித்தனர். 

எனினும் முச்சக்கர வண்டியில் தீ பற்றி எரிவதை அவதானித்த பிரதேசவாசிகள் வியாபாரிகள் ஒன்றிணைந்து  அணைக்க முயன்றபோதும் முச்சக்கர வண்டியின் முழுப் பகுதியிலும் தீ பரவி முற்றிலும் சேதமடைந்துள்ளது.

குறித்த தீ விபத்தால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. முச்சக்கர வண்டி முற்றாக தீக்கிரையானது. 

சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அத்தனகலு ஓயா உட்பட சில இடங்களில்...

2024-10-13 13:48:06
news-image

உடல்நல பாதிப்பினால் தேர்தலில் போட்டியிடவில்லை என...

2024-10-13 13:06:03
news-image

தேர்தல் கடமைகளுக்கு சமுகமளிக்காவிட்டால் ஒரு இலட்சம்...

2024-10-13 13:03:09
news-image

சீரற்ற காலநிலையால் இருவர் பலி; 76,218...

2024-10-13 12:46:23
news-image

கல்கிசையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

2024-10-13 12:54:10
news-image

தேசிய கட்சிகளின் தேசியப் பட்டியல் வெளியீடு!

2024-10-13 13:12:23
news-image

பிரதான எதிர்க்கட்சி தலைவர் வேட்பாளரா? பிரதமர்...

2024-10-13 12:12:07
news-image

விசேட தேவையுடைய சிறுவர்களை சித்திரவதை செய்த...

2024-10-13 12:00:53
news-image

பொறுப்புக்கூறலுக்கு உள்நாட்டு பொறிமுறை - உயிர்த்த...

2024-10-13 12:05:06
news-image

பிரிக்ஸ் அமைப்பில் இணைகிறது இலங்கை :...

2024-10-13 11:40:10
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - சிவராம்...

2024-10-13 11:24:35
news-image

ஹுங்கமவில் கண்ணாடிக் குவியலுக்கு அடியில் விழுந்து...

2024-10-13 11:19:29