மிஹிந்தலை பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபரின் மரணம் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் சிப்புக்குளம் பகுதியைச் சேர்ந்த 17 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் உயிரிழந்தவர் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவரெனவும், அவர் சில நாட்களுக்கு முன்னரே பிணையில் விடுதலையாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.