"ஆத்தங்கரை ஓரத்தில..." பாடலுக்கான நோர்வே விருதை வென்ற இலங்கையின் இசையமைப்பாளர் பிரபாலினி 

03 May, 2024 | 03:46 PM
image

"ஆத்தங்கரை ஓரத்தில..." தரமான கிராமத்து குத்துப்பாட்டு. இலங்கையின் முதல் தமிழ் பெண் இசையமைப்பாளர் பிரபாலினி பிரபாகரன் எழுதி, இசையமைத்து, பாடி, நடித்து, தயாரித்த இந்த பாடலாகும். 

Youtubeஇல் ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்த இந்த பாடலுக்கான Norway International Tamil Film Festivalஇன் Tamilar விருது பிரபாலினிக்கு வழங்கப்பட்டுள்ளது.

பிரபாலினி ஈழத்து மெல்லிசை மன்னர் M.P. பரமேஷ் மற்றும் சங்கீதபூஷனம் சிவமாலினி பரமேஷ் தம்பதியரின் மூத்த மகளாவார். 

இலங்கையின் 1968களில் முதல் தமிழிசைத் தட்டை தனது காதலிக்காக “உனக்குத் தெரியுமா நான் உன்னை நினைப்பது...” என்று எழுதி, இசையமைத்து, பாடி, தயாரித்து வெளியிட்டவர் மூத்த கலைஞர் ஈழத்து மெல்லிசை மன்னர் எம்.பி.பரமேஷ் ஆவார். 

அவரது மகளான பிரபாலினி பிரபாகரன் தனது பெற்றோரின் வழியில் வந்த இலங்கையின் முதல் பெண் இசையமைப்பாளர் என்ற பெருமைக்குரியவர் ஆகிறார்.

தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர்  ஸ்ரீகாந்த் தேவா வெளியிட, கடந்த பெப்ரவரி மாதம் காதலர் தினத்தில் வெளியான "ஆத்தங்கரை ஓரத்தில..." பாடல் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் விஜய் நடிக்கும் 'ஜன நாயகன்'...

2026-07-18 17:41:45
news-image

சரணடைய மறுக்கும் ஒரு பெண்ணின் உறுதியை...

2026-07-18 17:39:20
news-image

லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் 'மிஸ்டர் பாரத்'...

2026-07-18 17:35:32
news-image

நடிகர் டி. அண்டனி நடிக்கும் 'ஏன்...

2026-07-18 17:32:38
news-image

ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவித்த 'இதயம்...

2026-07-18 16:07:53
news-image

ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் 'சிவ...

2026-07-18 16:05:50
news-image

ஓகஸ்டில் வெளியாகும் மாதவனின் 'ஜி டி...

2026-07-18 14:33:40
news-image

லோகேஷ் கனகராஜ் கதையின் நாயகனாக வெற்றி...

2026-07-18 14:30:00
news-image

நடிகர் தனுஷ் வெளியிட்ட கிஷன் தாஸ்...

2026-07-18 14:26:40
news-image

நடிகர் லியோ சிவக்குமார் நடிக்கும் 'டெலிவரி...

2026-07-18 14:23:23
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகி...

2026-07-17 17:05:39
news-image

அருள்வான் - திரைப்பட விமர்சனம்

2026-07-17 16:30:17