அரசியல் கட்சிகளின் பலத்தை காட்டும் தினமாக மாறியுள்ள மே தினம் ; முஸ்லிம் இடதுசாரி முன்னணி அதிருப்தி

Published By: Digital Desk 3

03 May, 2024 | 03:14 PM
image

தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக பிரகடனப்படுத்தப்பட்ட மே தினம் இன்று அரசியல் கட்சிகளின் பலத்தை காட்டும் தினமாக மாறியுள்ளது. எதிர்வரும் காலங்களில் இநத நிலைமையை மாற்றியமைக்க தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஸ்லிம் இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளர்  எம். ஆர். எம். பைசால் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மே  முதலாம் திகதி தொழிலாளர்களின் தினமாக காணப்படுகின்றபோதும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களின் உரிமைகளை தொழிலாளர்களின் தேவைகளை கண்டறியாமல் அவர்களின் தேவைகளையும் உரிமைகளையும் வென்றெடுக்க முடியாத நிலைமையில் இன்று மே தினம் அமைந்திருக்கிறது. சர்வதேச தொழிலாளர் தினம் என மே முதலாம் திகதியை பிரகடனப்படுத்தியதன் நோக்கம் இன்று மறக்கப்பட்டிருக்கிறது.

அதற்கு பதிலாக அரசியல் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் கட்சிகளை பலப்படுத்துவதற்காக மக்களை ஒன்றிணைத்து தங்களின் பலத்தை  காட்டுவதற்காக மே தினத்தை மாற்றிக்கொண்டுள்ளன. இன்று அரசியல் கட்சிகளின் தொழிற் சங்கங்களிலும் தொழிலாளர்களின் கோரிக்கைகள்,குரல்கள் நசுக்கப்பட்டு வருகின்றன.

இம்முறையும் மே தினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. பிரதான அரசியல் கட்சிகளான ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன,தேசிய மக்கள் சக்தி தலைநகரில் தங்களின் மேதின கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தன. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கம்பஹாவில் மேதின கூட்டத்தை நடத்தி இருந்தது. ஆனால் இந்த கட்சிகளில் யாரும் தொழிலாளர்களின் உரிமைகள் தொடர்பில் குரல் கொடுக்கவில்லை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொறுப்புக்கூறலை நோக்கிய முக்கியமான நடவடிக்கை -பிரிட்டனின்...

2025-03-25 06:47:52
news-image

இன்றைய வானிலை

2025-03-25 06:12:51
news-image

ஐ.நா.வின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக...

2025-03-24 20:02:33
news-image

இந்திய பிரதமருடன் அரசாங்கம் செய்துகொள்ள இருக்கும்...

2025-03-24 20:22:23
news-image

ஐ.நா.வில் புதிய பிரேரணையை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை பிரித்தானிய...

2025-03-24 19:59:17
news-image

2 புதிய தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்...

2025-03-24 20:20:30
news-image

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 263 வேட்புமனுக்கள்...

2025-03-24 20:18:53
news-image

தேசபந்துவை பதவி நீக்கி பொலிஸ்மா அதிபர்...

2025-03-24 19:20:07
news-image

திஸ்ஸ விகாரையின் பூஜை வழிபாடுகளுக்கு எதிர்ப்பு...

2025-03-24 19:13:15
news-image

இறக்குமதி செய்யப்பட்ட சிரி ஸ்கேன் இயந்திரம்...

2025-03-24 20:19:56
news-image

மஹிந்த, ரணிலுடன் ஒன்றிணையப் போவதாக கூறப்படுவது...

2025-03-24 16:40:52
news-image

மூன்று நாள் டெங்கு ஒழிப்பு விசேட...

2025-03-24 19:18:15