(இராஜதுரை ஹஷான்)
பொருளாதார மறுசீரமைப்புக்காக இலங்கை தற்போது முன்னெடுத்துள்ள செயற்திட்டங்களை தடையில்லாமல் தொடர்ச்சியாக முன்னெடுத்தால் எதிர்காலத்தில் நெருக்கடியான நிலை தோற்றம் பெறாது.
மறுசீரமைப்புக்களினால் இலங்கையின் பொருளாதாரம் ஸதிரமடைந்துள்ளது என அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவிச் செயலாளர் ரொபட் கப்ரோன் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவிடம் குறிப்பிட்டுள்ளார்.
ஜோர்ஜியா நாட்டில் இடம்பெறும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 57 ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்துக் கொண்டுள்ள நிதி இராஜாங்க அமைச்சருக்கும்,அமெரிக்க திறைசேரியின் பிரதி உதவி செயலாளருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.
இச்சந்திப்பின் போது பொருளாதார மறுசீரமைப்புக்காக இலங்கை முன்னெடுத்துள்ள தீர்மானங்கள் மற்றும் செயற்பாடுகளின் முன்னேற்றம் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், பொருளாதார மீட்சிக்கு இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உப தலைவர் (தெற்கு,மத்திய மற்றும் மேல் ஆசியா) சின்ங்மிங் யாங்கிற்கும், நிதியமைச்சர் செஹான் சேமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இலங்கைக்கும் ஆசிய அபிவிருத்திக்கும் இடையில் 2024-2028 வரையான காலப்பகுதியில் கூட்டிணைவு மற்றும் மூலோபாய செயற்திட்டம் மற்றும் பொருளாதார மீட்சி உள்ளிட்ட காரணிகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கையின் பொருளாதார மீட்சிக்கும்,கடன் மறுசீரமைப்புக்கும் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குவதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் உப தலைவர் உறுதிப்படுத்தினார்.
இலங்கையை முன்னிலைப்படுத்தி சார்க் அபிவிருத்தி நிதியத்தின் கட்டுப்பாட்டு சபையின் ஏழாவது மாநாடு ஜோர்ஜியாவில் இடம்பெறுகின்ற நிலையில் இலங்கை தலைமைத்துவம் வழங்கும் காலப்பகுதியில் சார்க் அபிவிருத்தி நிதியத்தி;ன் நோக்கத்தை அடைவதற்கும், இலக்குகளை முன்னெடுத்துச் செல்வதற்கு உறுப்பு நாடுகள் வழங்கியுள்ள ஒத்துழைப்புகளுக்கும் நிதியமைச்சர் நன்றி தெரிவித்தார்.
சார்க் அபிவிருத்தி நிதியத்தின் கட்டுப்பாட்டு சபையின் அடுத்த தலைவராக பங்களாதேஷ் நாட்டின் நிதியமைச்சர் அபுல் மஹமுத் அலி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM