கெஹெலியவுக்கு வழங்கப்பட்ட இல்லத்திற்கு அவர் வாடகை செலுத்தவில்லை ; சம்பளத்திலிருந்து பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு பாராளுமன்ற செயலாளருக்கு கடிதம்

Published By: Digital Desk 3

03 May, 2024 | 11:54 AM
image

அரகலய போராட்ட காலத்தில் கண்டி அணிவத்த பிரதேசத்தில் உள்ள வீடு தீக்கிரையாக்கப்பட்டதையடுத்து,  முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் தனிப்பட்ட பாவனைக்கு தற்காலிகமாக வழங்கப்பட்ட  மத்திய மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு  மார்ச் மாதத்திற்கான வாடகைத் தொகை கிடைக்காத நிலையில்,  ரம்புக்வெல்லவின் சம்பளத்தில் இருந்து உரிய பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு மத்திய மாகாண முதலமைச்சு  பாராளுமன்ற செயலாளருக்கு கடிதம் ஒன்றை  அனுப்பியுள்ளது.

இது தொடர்பான கடிதம் ஏப்ரல் முதலாம் திகதி அனுப்பி வைக்கப்பட்டதாகவும், இதுவரை எந்த பதிலும் வரவில்லை எனவும் மத்திய மாகாண சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் இந்த வீட்டை பயன்படுத்துவதற்காக தனது சம்பளத்தில் 20 வீதத்தை மாகாண சபை கணக்கில் வரவு வைத்துள்ளார் என்றும், சுற்றாடல் அமைச்சராக இருந்த காலத்தில் உரிய தொகையை மத்திய  மாகாண சபை உரிய முறையில் பெற்றுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு  கடிதம்  அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதம் ஜனாதிபதியினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து, ரம்புக்வெல்ல தற்போது பாராளுமன்ற உறுப்பினராக உள்ளநிலையில், அவரது தனிப்பட்ட ஊழியர்கள் தற்போது மத்திய மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தை  பயன்படுத்தி வருகின்றனர்.

முன்னால் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சுப் பதவியை இழந்துள்ளமையினால், அவரது அமைச்சுப் பதவியில் இருந்து குறித்த இல்லத்தை பயன்படுத்துவதற்கு மாகாண சபைக்கு செலுத்த வேண்டிய தொகையை பெற்றுக்கொள்ளுமாறு கோரி மாகாண முதலமைச்சு பாராளுமன்ற செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அர்ஜுன் அலோசியஸ் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது குற்றப்புலனாய்வு...

2024-11-08 16:55:36
news-image

06 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை...

2024-11-08 17:48:32
news-image

ஊவா மாகாணத்திலுள்ள இந்திய வீடமைப்புத் திட்டங்களைப்...

2024-11-08 17:39:04
news-image

பாடசாலைகளில் சமூக ஊடகங்கள் பயன்படுத்துவது தொடர்பாக...

2024-11-08 17:48:15
news-image

ஜா - எலயில் ஆயுர்வேத மசாஜ்...

2024-11-08 17:17:34
news-image

தமிழ் மக்கள் பேரம் பேசும் சக்தியாக...

2024-11-08 17:03:38
news-image

பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை இரண்டாயிரத்துக்கும்...

2024-11-08 16:51:59
news-image

நீர்கொழும்பில் சட்டவிரோத மதுபானத்துடன் இளைஞன் கைது

2024-11-08 16:42:19
news-image

கடும் இடி, மின்னல் தாக்கம் குறித்து...

2024-11-08 16:38:09
news-image

ஹொரணை - கொழும்பு வீதியில் விபத்து...

2024-11-08 16:20:05
news-image

இலஞ்சம் பெற்ற அதிபருக்கு விளக்கமறியல்!

2024-11-08 16:18:34
news-image

ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி அமையும்...

2024-11-08 16:05:02