தம்பலகாமத்தில் விபசார விடுதி முற்றுகை : இரு பெண்கள் உட்பட உரிமையாளர் கைது

03 May, 2024 | 10:38 AM
image

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 97 ஆவது சந்தி கல்மெடியாவ தெற்கு பகுதியில் விபசார விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் வியாழக்கிழமை (02) மாலை இடம் பெற்றுள்ளது.

சிறிய தேநீர்க் கடை நடாத்தி வந்த உரிமையாளர் தனது கடைக்குப் பின்னால் உள்ள வீட்டில் விபசார விடுதியை நடாத்தி வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின் போது கண்டி, இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த 44,45 வயதுடைய இரு பெண்களும் 38 வயதுடைய வீட்டின் உரிமையாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீண்ட காலமாக இவ்விபச்சார விடுதி நடாத்தப்பட்டு வந்துள்ளதாகவும் விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்ட இரு பெண்கள் உட்பட உரிமையாளரையும் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் இன்று வெள்ளிக்கிழமை (03) கந்தளாய் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தம்பலகாமம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2026-02-15 06:15:28
news-image

பெரியவிளாத்திக்குளம் புல்மோட்டைவெளி அணைக்கட்டு, நீர்ப்பாசன வாய்க்காலை...

2026-02-14 17:28:42
news-image

ஜிந்துப்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு

2026-02-14 23:02:50
news-image

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு ; 32...

2026-02-14 23:03:48
news-image

வெளிநாட்டு இலங்கையர்களுக்கான e-BMD டிஜிட்டல் சேவை...

2026-02-14 17:08:26
news-image

வாகனம் மோதி காயமடைந்த சிறுத்தை குட்டியை...

2026-02-14 16:55:54
news-image

வவுனியா பொலிஸாரால் கணவன் மனைவி உட்பட...

2026-02-14 16:49:51
news-image

திருகோணமலை பட்டினத்தெரு கடலரிப்பை பாதுகாக்க மாநகர...

2026-02-14 17:29:08
news-image

மின்சாரக் கட்டண திருத்தம் குறித்து பொதுமக்களின்...

2026-02-14 17:28:11
news-image

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் - கிரிந்தே அஸ்ஸாஜி...

2026-02-14 17:08:53
news-image

"முழு நாடுமே ஒன்றாக": தேசிய போதைப்பொருள்...

2026-02-14 16:27:10
news-image

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் மற்றும் மழை...

2026-02-14 16:26:47