கமின்ஸ், புவ்ணேஷ்வரின் பந்துவீச்சுகளால் கடைசிப் பந்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது சன்ரைசர்ஸ்

03 May, 2024 | 05:15 AM
image

(நெவில் அன்தனி)

17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாத்தில் கடைசியாக நடைபெற்ற மூன்று போட்டிகளில் குறைந்த மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்ட நிலையில், ஹைதராபாத்தில் வியாழக்கிழமை (02) நடைபெற்ற போட்டியில் மீண்டும் மொத்த எண்ணிக்கை 200 ஓட்டங்களைக் கடந்ததுடன் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

கடைசிக் கட்டத்தில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய அப் போட்டியின் கடைசிப் பந்தில் ரோவன் பவலை எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டம் இழக்கச் செய்த புவ்ணேஸ்வர் குமார், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு ஒரு ஓட்ட வெற்றியை ஈட்டிக்கொடுத்தார்.

கடைசி 2 ஓவர்களில் ராஜஸ்தான் றோயல்ஸின் வெற்றிக்கு 20 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

19ஆவது ஓவரில் பெட் கமின்ஸ் முதல் பந்தில் விக்கெட் ஒன்றை கைப்பற்றி 7 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்தார்.

கடைசி ஓவரில் 11 ஓட்டங்களைக் கொடுத்த புவ்னேஸ்வர் குமார் கடைசி பந்தில் ஒரு விக்கெட்டை வீழ்த்த, ராஜஸ்தான் றோயல்ஸின் வெற்றி 2 ஓட்டங்களால் தவிறிப்போனது.

10 போட்டிகளில் ராஜஸ்தான் றோயல்ஸ் அடைந்த இரண்டாவது தோல்வி இதுவாகும். எனினும் 16 புள்ளிகளுடன் தொடர்ந்தும் அணிகள் நிலையில் முதலிடத்தில் இருக்கிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இந்த வெற்றியுடன் 12 புள்ளிகளைப் பெற்று அணிகள் நிலையில் சென்னை சுப்பர் கிங்ஸை பின்தள்வி  4ஆம் இடத்திற்கு முன்னேறியது.

சம அளவில் மோதிக்கொள்ளப்பட்ட அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 20 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 201 ஓட்டங்களைக் குவித்தது.

பவர் ப்ளேயில் அபிஷேக் ஷர்மா (12), அன்மோல்ப்ரீத் சிங் (5) ஆகிய இருவரும் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தனர். (35 - 2 விக்.)

எனினும் ட்ரவிஸ் ஹெட், நிட்டிஷ் குமார் ரெட்டி ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 96 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வீழ்ச்சியை சீர் செய்தனர்.

ட்ரவிஸ் ஹெட் 44 பந்துகளில் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 58 ஓட்டங்களைப் பெற்றார்.

ட்ரவிஸ் ஹெட் ஆட்டம் இழந்த பின்னர் நிட்டிஷ் குமார் ரெட்டியும் ஹென்றிச் க்ளாசனும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 32 பந்துகளில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கை 200 ஓட்டங்களைக் கடக்க உதவினர்.

நிட்டிஷ் குமார் ரெட்டி 42 பந்துகளில் 3 பவுண்டறிகள், 8 சிக்ஸ்கள் உட்பட 76 ஓட்டங்களுடனும் ஹென்றிச் க்ளாசன் 19 பந்துகளில் 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 42 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் ஆவேஷ் கான் 39 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

202 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 200 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

ராஜஸ்தான் றோயல்ஸின் ஆரம்பம் மிக மோசமாக இருந்தது.

ஆரம்ப வீரர் ஜொஸ் பட்லர் (0), அணித் தலைவர் சஞ்சு செம்சன் (0) ஆகிய இருவரும் புவ்ணேஷ்வர் குமாரின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தனர். (1 - 2 விக்)

எனினும் இளம் வீரர்களான யஷஸ்வி ஜய்ஸ்வால், ரியான் பரக் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 76 பந்துகளில் 133 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை சிறந்த நிலையில் இட்டனர்.

யஷஸ்வி ஜய்ஸ்வால் 40 பந்துகளில் 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 67 ஓட்டங்களைப் பெற்றார்.

ஜய்ஸ்வால் ஆட்டம் இழந்த விதம் தற்கொலைக்கு ஒப்பானது போல இருந்தது.

ஓவ் ஸ்டம்ப்புக்கு வெளியே தங்கராசு நடராஜன் வீசிய பந்தை இடதுபுறமாக ஸ்வீப் செய்ய முயன்றபோது பந்து ஜய்ஸ்வாலின் துடுப்பில் பட்டு விக்கெட்டைப் பதம் பார்த்தது. இதனால் அவர் துரதிர்ஷ்டவசமாக ஆட்டம் இழந்தார்.

மொத்த எண்ணிக்கை 156 ஓடட்ங்களாக இருந்தபோது ரியான் பரக் ஆட்டம் இழந்தார். அவர் 49 பந்துகளை எதிர்கொண்டு 8 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 77 ஓட்டங்களை விளாசினார்.

அவரைத் தொடர்ந்து 9 பந்துகளில் 13 ஓட்டங்களைப் பெற்ற ஷிம்ரன் ஹெட்மயர், நடராஜனின் மற்றொரு பந்தை சிக்ஸாக்க முயற்சித்து பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார்.

இதனைத் தொடர்ந்து கடைசி 2 ஓவர்களில் ராஜஸ்தான் றோயல்ஸின் வெற்றிக்கு 20 ஓட்டங்கள் தெவைப்பட்டது.

ஆனால், 19ஆவது ஓவரில் பெட் கமின்ஸ் வீசிய முதல் பந்தில் அதிரடி வீரர் த்ருவ் ஜுரெல் (1) ஆட்டம் இழந்தார். அடுத்த 4 பந்துகளில் ஒரு ஓட்டத்தை மாத்திரம் கொடுத்த பெட் கமின்ஸ் கடைசிப் பந்தில் 6 ஓட்டங்களைக் கொடுத்தார்.

இதற்கு அமைய கடைசி ஓவரில் ராஜஸ்தான் றோயல்ஸின் வெற்றிக்கு 13 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

புவ்ணேஷ்வர் குமார் எவ்வாறு முதலாவது ஓவரை சிறப்பாக ஆரம்பித்தாரோ அதேபோன்று கடைசி ஓவரை அழுத்ததிற்கு மத்தியல் சிறப்பாக வீசி 11 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்து கடைசிப் பந்தில் ரோவன் பவலின் விக்கெட்டை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு பரபரப்பான வெற்றியை ஈட்டிக்கொடுத்தார்

ரோவன் பவல் 27 ஓட்டங்களைப் பெற்றதுடன் ரவிச்சந்திரன் அஷ்வின் 2 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

புவ்ணேஷ்வர் குமார் 41 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் பெட் கமின்ஸ் 34 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஜய்தேவ் உனத்கட் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிறுத்தக் கடிகார விதிகளின் பிரகாரம் அபராதம்...

2024-06-13 17:39:33
news-image

சுப்பர் 8 சுற்றில் மேற்கிந்தியத் தீவுகள்;...

2024-06-13 11:11:44
news-image

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டி நியூஸிலாந்துக்கு...

2024-06-13 01:48:40
news-image

ஐக்கிய அமெரிக்காவை வெற்றிகொண்ட இந்தியா சுப்பர்...

2024-06-13 01:03:23
news-image

பாகிஸ்தானின் தலைவிதியைத் தீர்மானிக்கவுள்ள இந்தியா -...

2024-06-12 14:45:17
news-image

நமிபியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா 2ஆவது அணியாக...

2024-06-12 10:16:02
news-image

கடும் மழையினால் இலங்கையின் சுப்பர் 8...

2024-06-12 09:55:49
news-image

தோல்விகளால் துவண்டு போயுள்ள இலங்கை எழுச்சி...

2024-06-12 02:39:25
news-image

இரண்டு தோல்விகளைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு முதலாவது...

2024-06-12 02:02:16
news-image

இலங்கை மகளிர் குழாத்தில் 2 வருடங்களின்...

2024-06-11 23:15:20
news-image

மாலைதீவுகளில் உடற்கட்டழகர் போட்டி : இலங்கைக்கு...

2024-06-11 19:06:36
news-image

பங்களாதேஷை 4 ஓட்டங்களால் வென்ற தென்...

2024-06-11 00:42:17