மேற்கிந்தியத் தீவுகளின் டெவன் தோமஸுக்கு ஐசிசியினால் 5 வருடத் தடை

03 May, 2024 | 05:12 AM
image

(நெவில் அன்தனி)

மேற்கிந்திய தீவுகளின் வேகப்பந்து வீச்சாளர் டெவன் தோமஸுக்கு அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஐசிசியினால் 5 வருட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் (எஸ்எல்சி), எமிரேட்ஸ் கிரிக்கெட் சபை (ஈசிபி) மற்றும் கரீபியன் பிரீமியர் லீக் (சிபிஎல்) ஆகியவற்றின் ஊழல் தடுப்பு விதிகளின் ஏழு பரிந்துரைகளை மீறியதை தோமஸ் ஒப்புக்கொண்டார்.

ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபடுமாறு தூண்டியமை உட்பட மோசடியில் ஈடுபட்டதாக சுமத்தப்பட்ட 7 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 2023 மே மாதம் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து  தோமஸ்  இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

இதனை அடுத்து 2023 மே 23ஆம் திகதியிலிருந்து தற்காலிக தடைக்குள்ளானார். இப்போது அவர் குற்றச்சாட்டுக்களை ஒப்புக்கொண்டதால் தற்காலிக தடை விதிக்கப்பட்ட அதே தினத்திலிருந்து அவருக்கான 5 வருட தடை ஆரம்பமாகிறது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் ஊழல் தடுப்பு விதிகளில் நான்கை மீறியதாகவும் எமிரேட்ஸ் கிரிக்கெட் சபையின் ஊழல் தடுப்பு விதிகளில் ஒன்றை மீறியதாகவும் கரிபியன் பிறீமியர் லீக்கின் ஊழல் தடுப்பு விதிகளில் இரண்டை மீறியதாகவும் டெவன் தோமஸ் ஒப்புக்கொண்டார். இந்த ஏழு மீறல்களையும் அவர் ஏற்கனவே ஒப்புக்கொண்டிருந்தவையாகும்.

34 வயதான தோமஸ் அதிகமாக மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் போட்டிளிலேயே மேற்கிந்தியத் தீவுகளுக்காக 2009 முதல் 2022வரை விளையாடியுள்ளார். அவர் 21 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் 12 சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளிலும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியிலும் விளையாடியிருந்தார்.

கடைசியாக அவர் லீவார்ட் தீவுகளுக்காக 2023 மார்ச் மாதம் விளையாடியிருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நிறுத்தக் கடிகார விதிகளின் பிரகாரம் அபராதம்...

2024-06-13 17:39:33
news-image

சுப்பர் 8 சுற்றில் மேற்கிந்தியத் தீவுகள்;...

2024-06-13 11:11:44
news-image

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான போட்டி நியூஸிலாந்துக்கு...

2024-06-13 01:48:40
news-image

ஐக்கிய அமெரிக்காவை வெற்றிகொண்ட இந்தியா சுப்பர்...

2024-06-13 01:03:23
news-image

பாகிஸ்தானின் தலைவிதியைத் தீர்மானிக்கவுள்ள இந்தியா -...

2024-06-12 14:45:17
news-image

நமிபியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா 2ஆவது அணியாக...

2024-06-12 10:16:02
news-image

கடும் மழையினால் இலங்கையின் சுப்பர் 8...

2024-06-12 09:55:49
news-image

தோல்விகளால் துவண்டு போயுள்ள இலங்கை எழுச்சி...

2024-06-12 02:39:25
news-image

இரண்டு தோல்விகளைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு முதலாவது...

2024-06-12 02:02:16
news-image

இலங்கை மகளிர் குழாத்தில் 2 வருடங்களின்...

2024-06-11 23:15:20
news-image

மாலைதீவுகளில் உடற்கட்டழகர் போட்டி : இலங்கைக்கு...

2024-06-11 19:06:36
news-image

பங்களாதேஷை 4 ஓட்டங்களால் வென்ற தென்...

2024-06-11 00:42:17