வவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் முன்னெடுத்து வரும் போராட்டம் இன்று (25) 30 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக்கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் மற்றும் அவசரகாலச் சட்டத்தினை நீக்குமாறு கோரி தமது போராட்டத்தினை குறித்த மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை இப்போராட்டத்திற்கு இளைஞர், யுவதிகளும் ஆதரவினை வழங்குமாறு போராட்டக்காரர்கள் கேட்டுக் கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.