கடந்த தசாப்தங்களைப் போல் அல்லாமல் தற்போது இளைய தலைமுறையினர் பெற்றோர்கள் நிச்சயித்த வரன்களை கைப்பிடிப்பதில்லை.
காதலித்து திருமணம் செய்து கொள்வதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள். அது மட்டுமல்லாமல் திருமணத்திற்கு பிறகு குழந்தை பாக்கியம் என்பது இறைவனின் வரம் என்பதை உணராமல் குழந்தை பேற்றையும் பொருளாதார தன்னிறைவு அடைந்த பிறகு தான் என தள்ளி வைத்து விடுகிறார்கள்.
இதனால் புதுமண தம்பதிகள் இணைந்து உருவாக்கும் குடும்பத்தில் மகிழ்ச்சி என்பது இல்லாமல் மனக்குறை நீடிக்கிறது. பெற்றோர்களும் இது தொடர்பாக ஓர் எல்லைக்கு மேல் தங்களது மகனையோ மகளையோ வற்புறுத்தவும் முடிவதில்லை. மேலும் புதுமணத் தம்பதிகள் கருத்தரித்திருந்தாலும் கூட தற்போது வேண்டாம் என கரு கலைப்பு செய்து கொள்கிறார்கள்.
இதன் காரணமாக குடும்பத்தில் முன்னோர்களின் ஆசி தடை படுகிறது. அத்துடன் மட்டும் இல்லாமல் குடும்பத்தில் பரம்பரை பரம்பரையாக நீடித்து வந்த மகிழ்ச்சி குறைய தொடங்குகிறது. இது தொடர்பாக இளைய தலைமுறையினரிடத்தில் அவர்தம் பெற்றோர்கள் விளக்கமாக விவரிக்கும் போது அதனை அவர்கள் காது கொடுத்தும் கேட்பதில்லை. ஆன்மீகத்தின் மீதும் நம்பிக்கை கொள்வதில்லை. வேறு ஏதேனும் பரிகாரங்களை செய்யச் சொன்னால் இது மூடநம்பிக்கைகளுக்கு ஆதரவாக இருக்கிறது. அறிவியலுக்கு உகந்ததாக இல்லை என விளக்கமளித்து அதிலிருந்து பின்வாங்குகிறார்கள். இதனால் பெற்றோர்கள் சொல்ல இயலாத மன துயருக்கு ஆளாகிறார்கள். அவர்களின் முதிய வயதில் பேரன் பேத்திகளை பார்ப்பதற்கான ஏக்கம் குறையாக நீடிக்கிறது.
ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் குழந்தை பெற்றுக்கொள்ள தீர்மானிக்கும் போது இயற்கையான முறையில் கருத்தரிப்பு நிகழ்வதில்லை. மருத்துவ ரீதியிலான உதவியினை பெற்று கருத்தரிக்க வேறு வழியில்லாமல் விரும்புகிறார்கள். ஆனால் சில முறை அதிலும் தோல்வி பெறவே பெற்றோர்களிடத்தில் இது தொடர்பாக தங்களது நிலைப்பாட்டை விவரிப்பதற்கு அவர்களுடைய ஈகோ இடம் கொடுப்பதில்லை. இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி குறைந்து கருத்து முரண்கள் அதிகரிக்கத் தொடங்குகின்றன. இதுபோன்ற நிலையில் எம்முடைய முன்னோர்கள் பெற்றோர்களுக்கும், இளைய தலைமுறையினருக்கும் பின்பற்ற வேண்டிய எளிய தீப பரிகாரத்தை முன்மொழிந்திருக்கிறார்கள் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் உங்களுடைய முன்னோர்களின் ஆசி கிடைப்பதுடன் குடும்பத்தில் மகிழ்ச்சியும் பிறக்கும் என்கிறார்கள்.
அமாவாசை +பௌர்ணமி +செவ்வாய்+ வெள்ளி ஆகிய நான்கு நாட்களை தெரிவு செய்து கொள்ளுங்கள். இந்த நாட்களில் உங்கள் வீட்டு பூஜை அறையை சுத்தம் செய்து, பச்சரிசி மாவினால் ராசி கட்டம் ஒன்றை வரைந்து கொள்ளுங்கள். இதன் போது பச்சரிசி மாவுடன் தண்ணீரை சேர்த்துக் கொள்ளலாம். ஓரளவு விசாலமான முறையில் பன்னிரண்டு கட்டங்கள் ஜாதகத்தில் இருப்பது போல் வரைந்து விட வேண்டும். இந்த பன்னிரண்டு கட்டங்களில் நடுப்பகுதியை தோராயமாக தெரிவு செய்து அதில் மஞ்சள் பொடியால் பொட்டு போல் வட்டமாக வரைய வேண்டும். அதில் புதிதாக வாங்கிய பன்னிரண்டு அகல் விளக்குகளை சந்தனம், குங்குமம் வைத்து அலங்கரித்து, அந்த வட்டத்திற்குள் வைத்து விடுங்கள். அந்த அகல் விளக்கிற்குள் சுத்தமான பசு நெய்யை ஊற்றுங்கள். பஞ்சு திரி அல்லது தாமரைத் தண்டு திரியை வைத்து விளக்கேற்றவும்.
விளக்கு ஏற்றுவதற்கு முன் அந்த நெய்யில் சிறிதளவு சீரகத்தை சேர்த்து விடுங்கள். இந்த சீரகமும் நெய்யுடன் கலந்து தீபமாக எரியும் போது உங்களுக்கான பாவங்கள் கரைந்து புண்ணியங்கள் பெருகத் தொடங்கும். இதனை பன்னிரண்டு நாட்கள் தொடர்ச்சியாகவும் அல்லது செவ்வாய் வெள்ளி, அமாவாசை, பௌர்ணமி என பன்னிரண்டு சிறப்பு நாட்களில் தொடர்ச்சியாக செய்தால் உங்களுடைய வம்சம் விருத்தி அடையும். திருமண தடை அகலும். குழந்தை பேறு பாக்கியம் கிட்டும். இந்த எளிய பரிகாரத்தை செய்து வெற்றி பெற்றவர்கள் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள் வார்த்தைகளால் விவரிக்க இயலாது. எனவே இத்தகைய எளிய தீப பரிகாரத்தை நீங்களும் மேற்கொண்டு வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழத் தொடங்குங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே. இளம் தம்பதிகள் தங்களது குடும்பத்தை விரிவாக்கிக் கொள்வது தான் அவர்களின் வாழ்க்கைக்கான பற்றுக்கோடு என்பதனை உணர்ந்து கொண்டு இந்த எளிய தீப பரிகாரத்தை மனமுவந்து செய்ய வேண்டும்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM