அசௌகரியத்தையும், அவலட்சணத்தையும் உருவாக்கும் படர்தாமரை எனும் பாதிப்புக்கு நிவாரணம் பெறுவது எப்படி?

Published By: Digital Desk 7

02 May, 2024 | 05:21 PM
image

தற்போதுள்ள புவி வெப்பமயமாதல்  கணக்கின்படி கோடையில் அதிக வெப்பமும், மழைக்கால பருவத்தில் அதீத மழையும் பெய்து, நாம் வாழும் சூழல் இயல்பு தன்மையிலிருந்து மாறி விட்டது.

இதனால் கோடை காலத்தில் வெப்பத்தை தணிக்க பல வழிகளை கையாள்கிறோம். மேலும் எம்மில் பலரும் செல்லப் பிராணிகளை வளர்ப்பதில் பேரார்வம் காட்டுகிறோம். புற சூழல் காரணமாக செல்லப்பிராணிகளிடமிருந்து பூஞ்சை காளான் எனும் தொற்றின் காரணமாக எம்மில் பலருக்கு படர்தாமரை எனும் தோல் பாதிப்பு ஏற்படுகிறது.

இந்த பாதிப்பு கை, கால், தலை,முகம், இடுப்பு , தொடையின் மேல் பகுதி என உடலில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் ஏற்படக்கூடும். இதனால் எம்மில் சிலர் பாரிய அசௌகரியங்களை எதிர்கொள்வர். சிலருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதன் காரணமாக இந்த படர்தாமரை எனும் தோல் பாதிப்பு அதிகரித்து அவர்களின் தோற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது.

அத்துடன் இதனால் ஏற்படும் அரிப்பு தாங்க இயலாத தர்ம சங்கடத்தையும் தருகிறது. எனவே இதற்கு உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்த வயதிலும் எந்த சூழலிலும் தோல் பகுதியில் ஏற்படும் ஒரு தொற்று பாதிப்பு தான் படர்தாமரை. இதனை மருத்துவ மொழியில் டினியா என குறிப்பிடுகிறார்கள். எம்முடைய உடலில் வெப்பமான அல்லது ஈரப்பதமான தோல் பகுதிகளில் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது. சிலருக்கு கை விரல்கள் மற்றும் கால் விரல்களின் இடைப்பகுதியிலும் இத்தகைய பாதிப்பு ஏற்படுகிறது.

சிறிய வளையம் போல் தோன்றும் இத்தகைய பாதிப்பு விலங்குகளிடமிருந்து அதாவது செல்ல பிராணிகளிடமிருந்து மனிதர்களுக்கு எளிதாக பரவகிறது. மேலும் மண் பரப்பிலிருந்தும் இத்தகைய பூஞ்சை தொற்று பரவுகிறது. படர்தாமரை பாதித்த  நபர் பயன்படுத்திய ஆடை மூலமாகவோ அல்லது வேறு எதன் காரணமாகவோ மற்றொரு நபருக்கு இது பரவக் கூடும்.  நீரிழிவு நோயாளிகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் அவர்களுக்கும் இந்த படர்தாமரை பாதிப்பு ஏற்படக்கூடும்.

உடலில் தோல் பகுதியில் சிறிய வளையம் போல் இத்தகைய பாதிப்பு ஏற்படும். இந்த அறிகுறியை வைத்து உடனடியாக வைத்தியரை சந்தித்து ஆலோசனையும் அவர் பரிந்துரைக்கும் பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும்.

இதன்போது வைத்தியர்கள் உங்களது தோலின் மாதிரிகளை சேகரித்து, அதனை ஆய்வுக்கு உட்படுத்தி பாதிப்பின் காரணத்தை துல்லியமாக அவதானிக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து நவீன மருத்துவ தொழில்நுட்பங்கள் மூலம் கண்டறியப்பட்ட மருந்தியல் சிகிச்சைகள் மூலம் முதன்மையான நிவாரணத்தை வழங்குகிறார்கள்.

இதன் போது படர்தாமரையால் பாதிக்கப்பட்ட தோல் மீது பூசி கொள்வது போல் லோஷன், க்றீம், ஒயின்மென்ட் போன்ற மருந்துகளையும் வைத்தியர்கள் நிவாரணத்திற்காக அளிப்பர். வெகு சிலருக்கு இத்தகைய படர்தாமரை பாதிப்பின் வீரியத்தை பொறுத்து வாய் வழியாக உட்கொள்ளும் மருந்தினையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பர். சிலருக்கு மூன்று மாதங்கள் வரை சிகிச்சை அவசியப்படலாம். இந்த சிகிச்சையின் போது வைத்தியர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறையை உறுதியாக பின்பற்ற வேண்டும்.

வைத்தியர் தீப்தி

தொகுப்பு அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அசாதாரண கருப்பை ரத்தப்போக்கு பாதிப்பிற்குரிய நவீன...

2024-06-12 13:23:09
news-image

இடைநிலை நுரையீரல் தொற்று பாதிப்பிற்குரிய நவீன...

2024-06-12 09:12:17
news-image

மூளை கட்டியின் வகைகளும், காரணங்களும்...!?

2024-06-10 17:28:32
news-image

நீரிழிவு நோயால் நரம்பு மண்டல பாதிப்பு...

2024-06-08 16:19:56
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் மூளை ரத்த...

2024-06-07 18:48:18
news-image

குழந்தைகளுக்கு பிறவியிலேயே இதய குறைபாடு ஏற்படுவதை...

2024-06-04 14:04:02
news-image

உறக்கமின்மை குறைபாட்டை களைவதற்கான எளிய வழிமுறைகள்.?

2024-06-03 15:51:07
news-image

இரத்த சர்க்கரையின் அளவை உயர்த்தும் காரணிகள்...?!

2024-06-01 20:22:03
news-image

அடி வயிற்று தசை பிடிப்பு பாதிப்பிற்கான...

2024-05-31 16:33:40
news-image

முக வீக்க பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-05-30 17:29:57
news-image

பெட்ஸோர்ஸ் எனும் தோலில் ஏற்படும் பாதிப்பிற்குரிய...

2024-05-29 17:38:38
news-image

இரத்த நாள பாதிப்பிற்குரிய காரணங்கள் என்ன?

2024-05-28 15:34:49