ஹொரண - மீமன பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து, நண்பர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த இருவரும் வீட்டில் மது அருந்தியுள்ள நிலையில், இருவருக்கிடையில் வாய்த்தகராறு ஏற்பட்டு இறுதியில் மோதலுடன் நிறைவடைந்துள்ளது.

மோதலில் ஒருவர் மற்றவரை கூரிய ஆயுதத்தில் தாக்கியதில் வீட்டுக்கு வருகைத்தந்த நண்பர் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் வீட்டு உரிமையாளரான நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், தாக்குவதற்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.