முன்னாள் பிரதமரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உருவாக்கத் தலைவருமான  எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 117 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு  காலி முகத்திடலின் முன்னால் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வு நேற்றைய தினம் காலி முகத்திடலின் முன்னால்   எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் சிலை அமைக்கப்பட்டுள்ள வளாகத்தில் பெற்றது.

இந்நிகழ்வில்   ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ, அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த, மஹிந்த அமரவீர, நிமல் சிறிபால டி சில்வா, ஏ.எச்.எம் பௌஸி மற்றும் முதலமைச்சர்கள்  மாகாண ஆளுநர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

 எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் உருவச்சிலைக்கு காலை 10 மணியளவில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் அவரது உறவினர்கள் பலரும்   மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.