இலங்கை தொடர்பாக ஜெனிவா மனித உரிமைப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பிர காரம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் ஆறு தடவைகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
மேலும் இந்த புதிய பிரேரணையை அமுலாக்கம் செய்வதற்காக 362000 டொலர்கள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை செயலகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
இலங்கை தொடர்பாக ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் பிரகாரம் அந்தப் பிரேரணையை நிறைவேற்றுவதற்காக 362000 டொலர்கள் தேவைப்படுகின்றன.
மேலும் இலங்கை எவ்வாறு 2015 ஆம் ஆண்டு பிரேரணையை என்பதனை மதிப்பீடு செய்வதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் அதிகாரிகளைக் கொண்ட குழுவினர் ஆறு தடவைகள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். 14 நாட்களில் இந்த விஜயங்கள் அமையவுள்ளன.
கடந்த வியாழக்கிழமை இலங்கை தொடர்பான பிரேரணை வாக்கெடுப்பின்றி ஐககிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM