இந்தியாவில் வெப்ப அலையால் 9 பேர் பலி

Published By: Digital Desk 3

02 May, 2024 | 09:39 AM
image

இந்தியாவில் சில பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தமையால் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.  ஏப்ரல் மாதத்தில் கிழக்கு இந்தியாவில் அதிகரித்த வெப்பம் பதிவாகியுள்ளது. 

ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இந்தியாவின் தென்பகுதி, மத்திய இந்தியா, கிழக்கு இந்தியா, வடமேற்கு இந்தியாவின் சமவெளிப்  பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமான வெப்ப அலை வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.

ஏப்ரல் மாதம் 19ஆம் திகதி ஆரம்பமான ஏழு கட்ட பாராளுமன்றத் தேர்தலில், ஜூன் மாதம்  4 ஆம் திகதி முடிவுகள் வெளியாகும் நிலையில் வாக்குப்பதிவு குறைந்தமைக்கு கடும் வெப்பமும் ஒரு காரணம் என அரசியல் ஆய்வாளர்களால் கூறுகின்றனர்.

இதேவேளை, வெப்ப அலை எதிர்வரும் நாட்களில் படிப்படியாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் கிழக்குப்பகுதியில்  சராசரி வெப்பநிலை 28.12 செல்சியஸ் (82.61 ஃபாரன்ஹீட்) பதிவாகியுள்ளது. 

இந்தியாவில் 1901ஆம் ஆண்டுக்கு பிறகு அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கரூர், பரமத்தி, ஈரோடு, திருச்சி, வேலூர், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் வெப்ப அலை வீசி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"எல் நினோ தாக்கத்தினால் அதிக வெப்பம் நிலவும். பொதுவாக ஆசியாவில் வெப்பம் மற்றும் வரட்சியா வானிலையும், அமெரிக்காவின் சில பகுதிகளில் அதிக மழை பொழியும் என இந்திய வானிலை ஆய்வுத் துறையின் தலைவர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது...

2026-07-22 16:20:06
news-image

டெல்லியில் “கரப்பான் பூச்சி ஜனதா கட்சி”யினரால்...

2026-07-22 16:33:45
news-image

டெல்லி போராட்டம் : கைது செய்யப்பட்ட...

2026-07-22 11:57:27
news-image

அசாமில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ; கடந்த...

2026-07-22 11:13:45
news-image

Godzilla vs. Kong திரைப்படப் புகழ்...

2026-07-22 11:02:41
news-image

புதுடெல்லியில் பரபரப்பு: பிரதமர் மோடி இல்லம்...

2026-07-22 09:39:58
news-image

இந்தியாவில் சுரங்கம் இடிந்து விழுந்து விபத்து:...

2026-07-21 17:00:50
news-image

15 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்குச் சமூக ஊடகங்களை...

2026-07-21 15:50:13
news-image

கயானா படகு விபத்து; 27 பேரின்...

2026-07-21 11:41:07
news-image

கிழக்கு ஆப்கானிஸ்தானில் கனமழை, வெள்ளப்பெருக்கு; 20...

2026-07-21 10:34:42
news-image

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் -...

2026-07-21 10:32:37
news-image

வியட்நாமில் நடுவீதியில் தீப்பற்றி எரிந்த பஸ்...

2026-07-21 10:17:03