கல்குடா மதுபானத் தொழிற்சாலைக்கு எதிராக நீதிமன்ற தடையுத்தரவை பெறுங்கள் : முதலமைச்சர் பணிப்புரை 

Published By: Priyatharshan

25 Mar, 2017 | 09:30 AM
image

கல்குடாவில் நிர்மாணிக்கப்படுவதாக கூறப்படும் மதுபானத் தொழிற்சாலை எதிர்காலத்தில்  எந்தவொரு  அரசியல்  சூழ்நிலையின் கீழும் மீண்டும்  நிர்மாணிக்கப்படாமலிருக்கும் வகையில்  நீதிமன்ற தடையுத்தரவொன்றை  பெறுமாறு  வாழைச்சேனையின் பிரதேச சபையின் செயலாளருக்கு  கிழக்கு மாகாண முதலமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கல்குடாவில் நிர்மாணிக்கப்படுவதாக கூறப்படும் மதுபானத் தொழிற்சாலையின் பணிகள் நிறுத்தப்பட வேண்டும் என இதற்கு முன்னர் மாகாண சபை ஏகமனதாக ஒரு தீர்மானத்தையெடுத்து அதனை வாழைச்சேனை   பிரதேச  சபையின் செயலாளருக்கு அனுப்பி வைத்தது, இதனடிப்படையில் வாழைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் அதனை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தார் .

இந்நிலையில்  எதிர்காலத்திலும்  எந்தவொரு  அரசியல்  சூழ்நிலையின் கீழ் மீண்டும்  இந்த மதுபானதொழிற்சாலை நிர்மாணிக்கப்படாமலிருக்கும் வகையில்  நீதிமன்ற தடையுத்தரவொன்றை  பெறுமாறு  வாழைச்சேனையின் பிரதேச சபையின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்.

எமது  மாகாணத்தில் போதைப்பொருள் மற்றும் மதுபாவனையை நிறுத்துவதற்காக  பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்,இதனடிப்படையிலேயே போதைப்பொருளுக்கு எதிரான மாபெரும்  பேரணியொன்றையும் நாம் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேனவின் தலைமையில்  ஏறாவூரில் நடத்தியிருந்தோம்.

யுத்தத்துக்குப் பின்னரான  காலப் பகுதியில்  போதைப் பொருளின் பாவனை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்பதுடன் எமக்கு கிழக்கில் மேலும்  போதைப் பொருள் பாவனையை அதிகரிக்கின்ற நடவடிக்கைகளுக்கு இடமளிக்க முடியாது. கிழக்கிலிருந்து போதைப் பொருள் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் கிழக்கு மாகாண சபை உறுதியாக இருக்கின்றது 

அத்துடன்  இந்த மதுபான தொழிற்சாலை  தொடர்பில்  செய்தி சேகரிக்கச்  சென்ற ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை தொடர்பிலும் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.

ஊடகவியலாளர்கள் மீது  தாக்குதல் நடத்தும் கலாசாரம் மீண்டும் நாட்டுக்குள் தலைதூக்குவதற்கு இடமளிக்க முடியாது என்பது அதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவும் முடியாது.

அத்துடன் குறித்த  ஊடகவியலாளர்கள் மீது  தாக்குதல்கள் நடத்தப்பட்டமை தொடர்பில் தற்போது நீதிமன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அறிகின்றேன்.

குறித்த ஊடகவியலாளர்களின்  பாதுகாப்பு தொடர்பில்  கவனம் செலுத்துமாறு மட்டக்கப்பு மாவட்ட  பிரதி பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்துள்ளேன்,இந்த விடயம் தொடர்பில் பொலிஸ் தரப்பில்  நியாயமான விசாரணை இடம்பெற வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளேன்.

இனிமேலும்   ஊடகவியலாளர்கள் மீதான இவ்வாறான தாக்குதல்கள் நடவடிக்கைகள் எமது நாட்டின் மீது சர்வதேச ரீதியில் பாரிய அபகீர்த்தியை ஏற்படுத்தும் செயல்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் கிழக்கு மாகாண முதலமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44