(நா.தனுஜா)
செங்கொடிகளை ஏந்திய பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடனான மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் முதலாவது மே தினக்கூடம் புதன்கிழமை (மே.01) கொழும்பில் நடைபெற்றது.
ஆட்சியாளர்களை அச்சுறுத்தும் கோஷங்களை எழுப்பிய மக்கள் மத்தியில் உரையாற்றிய தலைவர் அநுரகுமார திசாநாயக்க , இந்த ஆட்சியாளர்களை வீழ்த்தி மக்களாட்சியை நிலைநாட்டுவோம் என சூளுரைத்தார்.
தேசிய மக்கள் சக்தியின் அரசியல் குழு உறுப்பினர் கே.டி.லால்காந்தவின் தலைமையில் பிற்பகல் 3.30 மணிக்கு கொழும்பு பி.ஆர்.சி மைதானத்தில் பி.ப 3.30 ஆரம்பமாகிய அக்கட்சியின் மேதின பேரணியானது, மாலை 4.50 மணியளவில் விகாரமகாதேவி பூங்காவுக்கு அருகில் உள்ள சி.டபிள்யூ.டபிள்யூ.கன்னங்கர மாவத்தையை வந்தடைந்தது.
'நாட்டை கட்டியெழுப்பும் தீர்வுக்கு மக்கள் சக்தி ஓரணியில்' எனும் தொனிப்பொருளில் நடாத்தப்பட்ட நேற்றைய மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள், "எமக்கு நீதி வேண்டும், சமத்துவத்தை நிலைநாட்டுங்கள், சட்டவாட்சியை உறுதிப்படுத்துங்கள், சிவப்பு அணியினரின் அரசாங்கத்தை உருவாக்க ஒன்றிணைவோம், ஊழலற்ற ஆட்சியை உருவாக்க மக்கள் ஓரணியில் ஒன்றிணைவோம், ஒழுக்கமான நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைவோம், எமது ஆட்சியில் பொருளாதார மீட்சி, மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அரசாங்கம் வேண்டும், தேசிய மக்கள் சக்தியே ஒரே தீர்வு, சிங்கள, தமிழ், முஸ்லிம்களாக இருந்தாலும் சிவப்பு குருதியுடைய மனிதர்கள் நாங்கள்" என்பன உள்ளடங்கலாக புரட்சிமிகு கோஷங்களை எழுப்பினர்.
அதுமாத்திரமன்றி "ஊழலை இல்லாதொழிப்போம், யுத்தத்தை நிறுத்து- பலஸ்தீன மக்களுக்கு உயிர்வாழ இடமளி, மக்கள் ஆட்சிக்கு இடமளிப்போம், அடுத்த தலைமுறைக்காக மக்கள் பலத்தை வெற்றிபெறச்செய்வோம், உலக வல்லரசுகளின் யுத்தவெறியைக் கண்டிக்கிறோம், தேசிய சுதந்திரத்துக்காக திசைகாட்டியுடன் ஒன்றிணைவோம், மக்கள் நேயமுள்ள ஆட்சிக்குத் தயாராவோம், ஊடக சுதந்தரம் - ஜனநாயகத்தைக் கொண்ட நாட்டை கட்டியெழுப்புவோம், உழைக்கும் மக்கள் வலிமையுடன் ஓரெழுச்சியில், எட்டுமணிநேர வேலைநேரத்தில் கை வைக்காதே' என்பன உள்ளடங்கலாக ஜனநாயகம், சமூகநீதி, தொழிலாளர் நலன் ஆகியவற்றை வலியுறுத்தும் வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் மக்கள் ஏந்தியிருந்தனர்.
இவ்வாறு பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் ஆரம்பமான தேசிய மக்கள் சக்தியின் மேதின பேரணி, கன்னங்கர மாவத்தையில் அமைக்கப்பட்டிருந்த கூட்ட மேடையை அண்மித்து நிறைவுற்றதுடன், அவ்வீதியில் செங்கொடி ஏந்திய மக்கள் வெள்ளம் திரண்டிருந்தது.
இதேவேளை புதன்கிழமை (மே.01) காலை யாழ்ப்பாணத்திலும், பி.ப 3 மணியளவில் அனுராதபுரம் மற்றும் மாத்தறையிலும் தேசிய மக்கள் சக்தியின் மேதினக் கூட்டம் நடைபெற்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM