(நெவில் அன்தனி)
சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் புதன்கிழமை (01) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 49ஆவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸை எதிர்த்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 7 விக்கெட்களால் அமோக வெற்றியீட்டியது.
இப் போட்டி முடிவை அடுத்து அணிகள் நிலையில் சென்னை சுப்பர் கிங்ஸ் தொடர்ந்தும் 4ஆம் இடத்தில் இருக்கிறது. 8ஆவது இடத்திலிருந்த பஞ்சாப் கிங்ஸ் ஒரு இடம் முன்னேறி 7ஆம் இடத்தை அடைந்துள்ளது.
இப் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸின் ஆற்றல்கள் எதிர்பார்த்ததைவிட குறைந்த மட்டத்தில் இருந்தது.
163 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 17.5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 163 ஓட்டங்களைப் பெற்று மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது.
மொத்த எண்ணிக்கை 19 ஓட்டங்களாக இருந்தபோது ஆரம்ப வீரர் ப்ரப்சிம்ரன் சிங் 13 ஒடட்ங்களுடன் வெளியேறினார்.
எனினும், ஜொனி பெயாஸ்டோவ், ரைலி ரூசோவ் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.
ஜொனி பெயாஸ்டோவ் 30 பந்துகளில் 46 ஓட்டங்களையும் ரைலி ரூசோவ் 23 பந்துகளில் 43 ஓட்டங்களையும் பெற்றனர்.
அதன் பின்னர் ஷஷாங்க் சிங், அணித் தலைவர் சாம் கரன் ஆகிய இருவரும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை வெற்றி அடையச் செய்தனர்.
சாம் கரன் 26 ஓட்டங்களுடனும் ஷஷாங் சிங் 25 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட சென்னை சுப்பர் கிங்ஸ் அணி பெரும் சிரமத்திற்கு மத்தியில் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது.
அஜின்கியா ரஹானேயும் அணித் தலைவர் ருத்துராஜ் கய்க்வாடும் 64 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தபோதிலும் அதன் பின்னர் விக்கெட்கள் சீரான இடைவெளியில் வீழ்ந்ததால் சென்னை சுப்பர் கிங்ஸினால் பலமான நிலையை அடைய முடியாமல் போனது.
முதலில் ஆட்டம் இழந்த அஜின்கியா ரஹானே 29 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்திய உலகக் கிண்ண அணியில் முதல் தடவையாக இடம்பிடித்த ஷிவம் டுபே ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார்.
மத்திய வரிசையில் சமிர் ரிஸ்வி 21 ஓட்டங்களையும் மொயின் அலி 15 ஓட்டங்களையும் பெற்றனர்.
எம்.எஸ். தோனி எதிர்கொண்ட 11 பந்துகளில் 5 பந்துகளை வீணடித்து ஆட்டம் இழக்காமல் 14 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் ராகுல் சஹார் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹாப்ரீத் ப்ரார் 17 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: ஹாப்ரீத் ப்ரார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM