மகளிர் ரி20 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றின் அரை இறுதிக்கு முன்னேறியது இலங்கை

Published By: Vishnu

01 May, 2024 | 11:02 PM
image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபியில் அமைந்துள்ள ஸெய்யத் கிரிக்கெட் விளையாட்டரங்கில் உகண்டாவுக்கு எதிராக புதன்கிழமை (01) நடைபெற்ற ஏ குழுவுக்கான மகளிர் ரி20 உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் 67 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இலங்கை, அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது.

தகுதிகாண் லீக் சுற்றில் ஐக்கிய அமெரிக்காவுக்கு எதிரான போட்டி மாத்திரம் இலங்கைக்கு எஞ்சியிருக்கிறது. அப் போட்டி முடிவு எப்படி அமைந்தாலும் அரை இறுதியில் வெற்றிபெற்றால் மாத்திரமே மகளிர் ரி20 உலகக் கிண்ண பிரதான சுற்றில் விளையாட இலங்கை தகுதிபெறும்.

புதன்கிழமை நடைபெற்ற உகண்டாவுக்கு எதிரான போட்டியில் விஷ்மி குணரட்ன குவித்த ஆட்டம் இழக்காத அபார அரைச் சதம், இனோகா ரனவீர, அறிமுக வீராங்கனை ஷஷனி கிம்ஹானி, கவிஷா டில்ஹாரி ஆகியோரின் திறமையான சுழல்பந்துவீச்சுகள் என்பன இலங்கையின் வெற்றியை இலகுவாக்கின.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றது.

விஷ்மி குணரட்னவும் சமரி அத்தபத்துவும் 46 பந்துகளில் 50 ஓட்டங்களை ஆரம்ப விக்கெட்டில் பகிர்ந்த நிலையில் சமரி அத்தபத்து 24 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார்.

அவரைத் தொடர்ந்து ஹர்ஷிதா சமரவிக்ரம 7 ஓட்டங்களை மாத்திரம் பெற்று வெளியேறினார்.

தொடர்ந்து விஷ்மி குணரட்னவும் ஹாசினி பெரேராவும் 3ஆவது விக்கெட்டில் 51 பந்துகளில் 65 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

ஹாசினி பெரேரா 30 ஓட்டங்களுடனும்  அவரைத் தொடர்ந்து   கவிஷா டில்ஹாரி 7 ஓட்டங்களுடனும் களம் விட்டகன்றனர்.

விஷ்மி குணரட்ன 64 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக 73 ஓட்டங்களுடனும் நிலக்ஷிகா சில்வா 3 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

155 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய உகண்டா மகளிர் அணி 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும்  இழந்து 87 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

ப்ரொஸ்கோவியா அலாக்கோ 36 ஓட்டங்களையும் அணித் தலைவி ஜெனட் மிபாபாஸி 14 ஓட்டங்களையும் சாரா வலாஸா 10 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இனோக்கா ரணவீர 3 ஓவர்களில் 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் 15 வயதுடைய அறிமுக வீராங்கனை 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கவிஷா டில்ஹாரி 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

இப் போட்டி முடிவில் இலங்கை அணித் தலைவி சமரி அத்தபத்துவுடன் உகண்டா வீராங்கனைகள் படம் எடுத்துக்கொண்டமை விடேச அம்சமாகும்.

ஆட்டநாயகி: விஷ்மி குணரட்ன

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மென்செஸ்டர் கால்பந்தாட்ட பயிற்சியகத்தின் ஏற்பாட்டில் இலங்கையில்...

2025-01-22 23:23:16
news-image

19இன் கீழ் மகளிர் ரி20 உலக்...

2025-01-22 19:40:49
news-image

எம்.சி.ஏ. - சிங்கர் சுப்பர் பிறீமியர்...

2025-01-21 20:30:52
news-image

19இன் கீழ் மகளிர் டி20 உலகக்...

2025-01-21 19:42:42
news-image

லசித் மாலிங்கவின் கில்லர் புத்தக வெளியீடு

2025-01-21 17:32:37
news-image

மேற்கிந்தியத் தீவுகளை வெற்றிகொண்டு சுப்பர் சிக்ஸ்...

2025-01-21 12:04:39
news-image

கால்பந்தாட்டம் மூலம் ஒற்றுமை 2ஆம் கட்டப்...

2025-01-20 20:36:39
news-image

நியூஸிலாந்தை நைஜீரியாவும் அயர்லாந்தை  ஐக்கிய அமெரிக்காவும்...

2025-01-20 19:06:08
news-image

சர்வதேச தரத்தில் சீகிரியாவில் புதிய கோல்ஃப்...

2025-01-19 19:56:12
news-image

துடுப்பாட்டத்தில் சனெத்மா, பந்துவீச்சில் ப்ரபோதா அற்புதம்;...

2025-01-19 12:39:42
news-image

சுப்பர் சிக்ஸுக்கு இலக்குவைத்துள்ள இலங்கை  ஏ...

2025-01-18 21:42:27
news-image

இங்கிலாந்துக்கு எதிரான இந்திய ஒருநாள் கிரிக்கெட்...

2025-01-18 21:36:53