தேர்தலுக்குப் பின்னர் நாடு எதை நோக்கிச் செல்லும் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும் - மஹிந்த 

Published By: Vishnu

02 May, 2024 | 11:18 AM
image

(இராஜதுரை ஹஷான்)

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆசீர்வாதம் பெறுபவரே ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறுவார்.

இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தீர்மானமிக்கது.வெற்றிப் பெறும் வேட்பாளர் எம்மிடம் உள்ளார்.

ஆகவே நாட்டு மக்கள் அனைவரும் எம்முடன் கைகோர்க்க வேண்டும் என பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மே தின கூட்டம் ' வெற்றிபெறும் நாடு ஒரே பயணம்' என்ற தொனிப்பொருளின் கீழ் பொரளை கெம்பல் மைதானத்தில் புதன்கிழமை (1)இடம்பெற்றது. இதன்போது உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

எமது பலத்தை மே தின கூட்டத்தின் ஊடாக மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளோம். அரசியலில் நாங்கள் பலவீனமடையவுமில்லை,வீழ்ச்சியடையவுமில்லை.

எமக்கு எதிராக போலியான குற்றச்சாட்டுக்களும்,சேறுபூசல்களும் சர்வதேச மற்றும் தேசிய சக்திகளால் முன்னெடுக்கப்படுகின்றன.2015 ஆம் ஆண்டும் இவ்வாறான தன்மையே காணப்பட்டது.

நாட்டு மக்களை தொடர்ந்து போராட்டத்தில் வைத்திருக்கவும்,வீதிக்கிறக்கவும் ஒரு தரப்பினர் நினைக்கிறார்கள்.

பிறிதொரு தரப்பினர் 'உயரம் என்றால் காவலாளி,குட்டை என்றால் தொழிலாளி' என்ற மனநிலையில் இருந்துக் கொண்டு செயற்படுகிறார்கள்.

அதிகாரத்தில் இருந்த போதும்,இல்லாத போதும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்துள்ளேன்.

தொழிலாளரின் உரிமைகளை மே தினத்தில் மாத்திரம் வரையறுக்கவில்லை. தொழிற்சங்கத்தினருடன் இணக்கமான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பல பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டுள்ளேன்.

இந்த ஆண்டு தீர்மானமிக்கது.ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் நாடு எதை நோக்கிச் நோக்கிச் செல்லும் என்பதை  நாட்டு மக்கள் சிந்திக்க வேண்டும்.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆசிர்வாதம் உள்ள நபரே ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறுவார்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப் பெறக் கூடிய வேட்பாளர் எம்மிடம் உள்ளார்.ஆகவே நாட்டு மக்கள் அனைவரும் எம்முடன் கைகோர்க்க வேண்டும்.

கொவிட் பெருந்தொற்று காலத்தில் மக்களை பற்றி சிந்தித்தோம்.அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதா அல்லது நாட்டு மக்களை காப்பாற்றுவதா என்ற இரு தெரிவுகள் எம்முன் காணப்பட்டன.

நாட்டு மக்களை காப்பாற்றும் விடயத்தை தெரிவு செய்தோம்.அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்ளும் விடயத்தை தெரிவு செய்திருந்தால் காலி முகத்திடல் போராட்டம் தோற்றம் பெற்றிருக்காது.

முப்படைகளின் ஒத்துழைப்புடன் யுத்தத்தை நிறைவு செய்தோம்.யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் எம் மீது பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. யுத்தத்தை நிறைவு செய்து,சுதந்திரத்தை உறுதிப்படுத்தியது குற்றமா, 1971,1988 மற்றும் 1989 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் வீரர்களாக செயற்பட்டு தீ வைப்பதையும்,கொலை செய்வதையும் பிரதான கொள்கையாக கொண்டிருந்த தரப்பினர் இன்று பொருளாதார முன்னேற்றம்,தேசிய நல்லிணக்கம் பற்றி பேசுகிறார்கள். அக்காலப்பகுதிகளில் அந்த சூழலை அனுபவித்தவர்களுக்கே அதன் வேதனை தெரியும்.

மக்கள் விடுதலை முன்னணி பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு எக்காலத்திலும் பங்களிப்பு வழங்கவில்லை. 75 ஆண்டுகால அரசியலை விமர்சிக்கிறார்கள். ஆனால் இக்காலப்பகுதியில் அரசாங்கங்களை ஸ்தாபிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கியதையும், அமைச்சு பதவி வகித்ததையும் மறந்து விட்டார்கள். இவர்களுக்கு கொலை செய்ய மட்டுமே தெரியும்.

2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் போராட்டம் தீவிரடைந்த போது அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு சஜித் பிரேமதாசவிடமும், அனுர குமார திஸாநாயக்கவிடமும் கோரினோம்.

நாட்டை பற்றி சிந்திக்காமல் தமது எதிர்கால அரசியல் பற்றி சிந்தித்துக் கொண்டு இவர்கள் அரசாங்கத்தை பொறுப்பேற்கவில்லை. நெருக்கடியான சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தை பொறுப்பேற்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் குறிப்பிட்டோம். அவர் எவ்வித நிபந்தனைகளும் விதிக்காமல் அரசாங்கத்தை பொறுப்பேற்றார். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு கட்சி என்ற அடிப்படையில் ஒத்துழைப்பு வழங்கினோம்.

இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தீர்மானமிக்கது. 2015 ஆம் ஆண்டு மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கியது அரசியலில் செய்த பாரிய தவறு என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கவலை தெரிவிக்கிறார்.

கவலை தெரிவிப்பதால் ஒன்றும் மாறாது நாடே பின்னோக்கிச் சென்றது. ஆகவே நாட்டு மக்கள் அரசியல் ரீதியில் சிறந்த தீர்மானத்தை எடுக்க வேண்டும்.வெற்றிபெறும் வேட்பாளர் எம்மிடம் உள்ளார். ஆகவே அனைவரும் பொதுஜன பெரமுனவுடன் கைகோர்க்க வேண்டும் என நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2026-02-15 06:15:28
news-image

பெரியவிளாத்திக்குளம் புல்மோட்டைவெளி அணைக்கட்டு, நீர்ப்பாசன வாய்க்காலை...

2026-02-14 17:28:42
news-image

ஜிந்துப்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் உயிரிழப்பு

2026-02-14 23:02:50
news-image

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு ; 32...

2026-02-14 23:03:48
news-image

வெளிநாட்டு இலங்கையர்களுக்கான e-BMD டிஜிட்டல் சேவை...

2026-02-14 17:08:26
news-image

வாகனம் மோதி காயமடைந்த சிறுத்தை குட்டியை...

2026-02-14 16:55:54
news-image

வவுனியா பொலிஸாரால் கணவன் மனைவி உட்பட...

2026-02-14 16:49:51
news-image

திருகோணமலை பட்டினத்தெரு கடலரிப்பை பாதுகாக்க மாநகர...

2026-02-14 17:29:08
news-image

மின்சாரக் கட்டண திருத்தம் குறித்து பொதுமக்களின்...

2026-02-14 17:28:11
news-image

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் - கிரிந்தே அஸ்ஸாஜி...

2026-02-14 17:08:53
news-image

"முழு நாடுமே ஒன்றாக": தேசிய போதைப்பொருள்...

2026-02-14 16:27:10
news-image

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் மற்றும் மழை...

2026-02-14 16:26:47