தமிழ் சினிமாவில் குழந்தைகளை மையமாக வைத்து படமெடுத்திருக்கிறார்கள். அதேபோல் குழந்தைகள் மட்டுமே பார்த்து ரசிக்கக்கூடிய படங்களையும் உருவாக்கி இருக்கிறார்கள்.
ஆனால் அண்மைக்காலமாக குழந்தைகளை வைத்து, குழந்தைகளும் பார்க்கக் கூடிய படங்கள் வெளியாவது அரிதாகி விட்டது. கள்ளம் கபடமற்ற சிறார்கள் உலகம் அழகியல் பூர்வமானது. அர்த்தப்பூர்வமானது. அவர்களின் உலகத்தில் பெற்றோர்களே சிம்ம சொப்பனம்.
பெற்றோர்களே நட்புக்குரியவர்கள். பெற்றோர்களே வழிகாட்டிகள். ஆனால் நண்பர்கள் இல்லாமல் இருக்க மாட்டார்கள். இந்த உளவியலை மையப்படுத்தி எண்பதுகளில் குழந்தைகளின் உலகத்தை அர்த்தப்பூர்வமாகவும், அழகியல் பூர்வமாகவும், உணர்வுபூர்வமான படைப்பாகவும் உருவாகி இருப்பது தான் 'குரங்கு பெடல்'. பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்ற இந்த திரைப்படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு உதவிகளை செய்ததுடன், இப்படத்தை வாங்கி வெளியிடுகிறார்.
இயக்குநர் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'குரங்கு பெடல்' திரைப்படத்தில் காளி வெங்கட் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடன் ஐந்து சிறார்கள் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகி இருக்கிறார்கள். ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படம் மே மூன்றாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது.
இந்நிலையில் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதன்போது காணொளி வழியாக படத்தை வழங்கும் சிவகார்த்திகேயன் பேசினார். இதை தொடர்ந்து படக்குழுவினர் ஊடகவியலாளர்களுடன் உரையாடினர்.
படத்தைப் பற்றி மூலக் கதை வழங்கிய எழுத்தாளர் ராசி அழகப்பன் பேசுகையில், '' எமக்கும், எம்முடைய தந்தையாருக்கும் நடைபெற்ற உண்மை சம்பவம்தான் இந்த கதை. இதனை சிறுகதையாக எழுதி வார இதழ் ஒன்றுக்கு அனுப்பினேன். சிறந்த கதையாக தெரிவு செய்யப்பட்டு பரிசு கிடைத்தது. சைக்கிள் என்பது கிராமத்தின் அடிப்படை வாகனம். கிராமங்களுக்கு மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்திலும் இதனை பார்க்கலாம். எம்மில் பெரும்பாலானவர்கள் பால்ய பிராயத்தில் சைக்கிளை ஓட்டியிருப்பார்கள். அதனை இந்தத் திரைப்படம் நினைவுபடுத்தும்'' என்றார்.
இசையமைப்பாளர் ஜிப்ரான் பேசுகையில், '' வாகை சூடவா படத்திற்குப் பிறகு கிராமிய சூழலில் இசையமைக்கும் வாய்ப்பு இந்த படத்தில் கிடைத்தது. இதற்காக பட குழுவினருக்கு நன்றி தெரிவிக்கிறேன். படத்தைப் பார்த்ததும் எமக்கும் எம்முடைய பால்ய காலம் நினைவுக்கு வந்தது. அந்த வயதில் மீசை முளைப்பதற்கு முன்னரே நாம் பெரிய பையனாகி விட்டோம் என சொல்வது சைக்கிள் தான். அந்த வயதில் சைக்கிளை ஓட்டிக்கொண்டு செல்லும்போது கிடைக்கும் உணர்வு விவரிக்க முடியாதது. இந்தப் படத்தை சிவகார்த்திகேயன் வழங்குவதால் அவருக்கும் எம்முடைய பிரத்யேக நன்றியை பதிவு செய்து கொள்கிறேன்'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM