தனித்துவமான நடிப்புத் திறன் பெற்று நடிகை சோனியா அகர்வால் வில்லியாக மிரட்டும் 'தண்டுபாளையம்' எனும் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இதன் போது இயக்குநர் அரவிந்தராஜ் சிறப்பு அதிதியாக பங்கு பற்றி படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இயக்குநர் டைகர் வெங்கட் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'தண்டுபாளையம்' எனும் திரைப்படத்தில் சோனியா அகர்வால், வனிதா விஜயகுமார், முமைத்கான், ரவி காளே, சூப்பர் குட் சுப்பிரமணி, ஆலி, பிர்லா போஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி. இளங்கோவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜித்தின் கே. ரோஷன் இசையமைத்திருக்கிறார். உண்மை சம்பவங்களை தழுவி க்ரைம் திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வெங்கட் மூவிஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குநர் டைகர் வெங்கட் தயாரித்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை வெளியீடு சென்னையில் நடைபெற்றது. இதன்போது படத்தைப் பற்றி பேசிய இயக்குநர் டைகர் வெங்கட், '' இந்தத் திரைப்படம் தெலுங்கில் மூன்று பாகங்களாக உருவாகி, பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. தற்போது நான்காம் பாகத்திற்கான பணிகள் தொடங்கி இருக்கிறது. இந்தத் திரைப்படம் கன்னடத்தில் இரண்டு பாகங்கள் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றிருக்கிறது. தற்போது தமிழுக்காக திரைக்கதையில் சில மாற்றங்களை செய்து முதல் பாகத்தை உருவாக்கியிருக்கிறோம். உண்மை சம்பவங்களை தழுவி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் சோனியா அகர்வால் மற்றும் வனிதா விஜயகுமார் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இதற்காக அவர்களிடத்தில் கதை சொல்லும் போது படத்தில் மது அருந்தும் காட்சி புகை பிடிக்கும் காட்சி இருக்கிறது என சொன்னேன். ஆனால் அதை அவர்கள் திறமையாக நடித்து ஒத்துழைப்பு வழங்கினார். இந்தத் திரைப்படத்தை மே மாதத்தில் திரையிடுவதற்காக திட்டமிட்டு வருகிறோம்'' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM