' நடிகையர் திலகம்' எனும் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தேசிய விருதை வென்ற நடிகை கீர்த்தி சுரேஷ் கதையின் நாயகியாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ரிவால்வர் ரீட்டா' எனும் திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது என படக் குழுவினர் பிரத்யேக காணொளி மற்றும் புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் பகிர்ந்துள்ளனர்.
இயக்குநர் கே. சந்துரு இயக்கத்தில் உருவாகி வரும் 'ரிவால்வர் ரீட்டா' எனும் திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார்.
இவருடன் ராதிகா சரத்குமார், ரெடின் கிங்ஸ்லீ, ரவி காளே, ஜான் விஜய், சென்ராயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை கே. எல். பிரவீண் மேற்கொள்கிறார். திரில்லர் ஜேனரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஃபேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் தி ரூட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்திருக்கிறது என படக் குழுவினர் பிரத்யேக காணொளி மற்றும் புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து படத்தின் இறுதி கட்டப் பணிகள் விரைவில் தொடங்கும் என்றும் படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் இந்த ஆண்டில் வெளியான 'சைரன்' திரைப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்றது என்பதும், இவரது நடிப்பில் விரைவில் 'ரகு தாத்தா' எனும் திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM