மலைநாட்டு மக்களை தொழிலாளர்களாக அன்றி சொந்த காணிக்கான உரிமையாளர்களாக மாற்றுவேன் - தலவாக்கலை மே தினக் கூட்டத்தில் சஜித் 

01 May, 2024 | 01:32 PM
image

(எம்.மனோசித்ரா)

மலைநாட்டு மக்களை தொழிலாளர்களாக அன்றி, சொந்தமான காணியை உடைய சிறுதோட்ட உரிமையாளர்களாக்கி, உங்களை அந்த காணிக்கான உரிமையாளராகவும் ஆக்குவேன் என்று தேசிய தொழிலாளர் சங்கத்தின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

மலையக மக்களுக்கு காணி மற்றும் வீட்டு உரிமை வழங்கப்படுமெனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தமிழ் மொழியில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

அத்துடன் மலையக மக்களையும் அவர்களின் மொழி உரிமையையும் பாதுகாப்பேன் என்றும் குறிப்பிட்டார்.

தேசிய தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில்  பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம்  தலைமையில் இன்று புதன்கிழமை (1) தலவாக்கலை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்திலேயே எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

கூட்டத்தில் தொடர்ந்து சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் எதிர்க்கட்சித் தலைவர் உரையாற்றுகையில்,

நான் மலையக மக்களையும், அவர்களின் மொழி உரிமையையும் பாதுகாப்பேன். அவர்களுக்கு  காணி மற்றும் வீட்டு உரிமை வழங்கப்படும். மலைய மக்களின் கிராமிய, நகர அபிவிருத்திக்கு நான் பொறுப்பு. அவர்களின் மருத்துவ, கல்வி, சத்துணவு உரிமைகளை பாதுகாப்பேன். 

தோட்டத் தொழிலாளர்களை சிறு தேயிலை உற்பத்தியாளர்களாக மாற்றுவேன். உங்களின் அரசியல், மத, கலாசார உரிமைகளும் பாதுகாக்கப்படும். அனைத்து நெருக்கடியான சந்தர்ப்பங்களிலும் நாட்டுக்காக உழைத்த பெருந்தோட்ட மக்களுடன் மே தினக் கூட்டத்தை நடத்த வாய்ப்பு கிடைத்தமையை நான் பாக்கியமாக கருதுகின்றேன். 

நான் உங்களை தோட்டத் தொழிலாளர்கள் என்று அழைக்க விரும்பவில்லை. நீங்கள் மலைநாட்டு மக்கள். உங்களுடன் கைகோர்த்து உங்கள் வாழ்க்கையை நாம் பாதுகாப்போம். மலைநாட்டு மக்கள் வாழும் சகல மாவட்டங்களிலும் அவர்களின் சகல உரிமைகளையும் உறுதிப்படுத்துவதற்கான விசேட அரச பொறிமுறையொன்றை உருவாக்குவோம். 

இதுவரை கால வரலாற்றில் உங்களை தொழிலாளர்களாகவே வைத்திருப்பதற்கே அனைவரும் முயற்சித்தனர். 

தேர்தல் காலங்களில் மாத்திரம் உங்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக கூறுவார்கள். அதனை விட உயர்ந்த ஒரு விடயத்தை இங்கு நான் முன்வைக்கின்றேன். 

எனது தந்தை குடியுரிமையை வழங்கிய இந்த மலைநாட்டு மக்களை தொழிலாளர்களாக அன்றி சொந்தமான காணி உடைய சிறுதோட்ட உரிமையாளர்களாக்கி, உங்களை அந்த காணிக்கான உரிமையாளராகவும் ஆக்குவேன் என மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-06-15 06:26:02
news-image

பாராளுமன்றம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கூடுகிறது !

2024-06-14 18:08:19
news-image

நீர்கொழும்பு கடலில் மூழ்கி இரு மாணவர்கள்...

2024-06-14 22:16:30
news-image

தமிழ் பொதுவேட்பாளராக களமிறங்க தயார் ;...

2024-06-14 22:31:10
news-image

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர்...

2024-06-14 20:17:48
news-image

நுவரெலியாவில் போலி மருத்துவ நிலையம் சுற்றிவளைப்பு ...

2024-06-14 20:10:57
news-image

தேர்தல் விவகாரங்களில் தலையிடவில்லை - சர்வதேச...

2024-06-14 17:33:56
news-image

இராணுவம் மீதான யுத்தக் குற்றச்சாட்சியங்களை சேகரிக்கும்...

2024-06-14 19:43:25
news-image

இராணுவச் செயற்பாடுகளுக்காக ரஷ்யா சென்றுள்ள இலங்கையர்களை...

2024-06-14 19:30:54
news-image

வடக்கின் 3 மாவட்டங்களில் 6 இடங்களில்...

2024-06-14 19:26:50
news-image

நாட்டில் போதைப்பொருள் கடத்தல்கள் குறைவடைந்துள்ளன ;...

2024-06-14 19:18:57
news-image

கெஹலிய உள்ளிட்ட 8 பேருக்கு மீண்டும்...

2024-06-14 18:28:24