ஜனா­தி­ப­தியை கடந்த 2006 ஆம் ஆண்டு கொலை செய்ய முயற்­சித்து சிறை­வாசம் அனு­ப­வித்துவரும் விடு­த­லைப்­புலி உறுப்­பி­ன­ரான சிவ­ராஜா திலீ­ப­னுக்கு ஜனா­தி­பதி நேற்று தனது ஒரு­வ­ருட பூர்த்தி விழா­வின்­போது பொது­மன்­னிப்பு வழங்­கினார்.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன 2006 ஆம் ஆண்டில் அமைச்­ச­ராக பத­வி­வகித்த­போது ஏப்ரல் 23 ஆம் திகதி ஜனா­தி­ப­தியை கொலை செய்­வ­தற்கு தற்­கொலை குண்டுத்தாக்­கு­தல் நடத்தப்பட்டது.

இந்நிலையில் இந்த சம்பவத்தின் சூத்­தி­ர­தா­ரி­யான சிவ­ராஜா தீலிப்பன் கைது செய்­யப்­பட்டு சிறைவாசம் அனுபவித்துள்ளார்.

அந்தவகையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­வி­யேற்று ஒரு­வ­ருட பூர்த்தி நிகழ்வு "நல்­லாட்­சியும் ஸ்திர­மான நாடும்" என்ற தொனிப்­பொ­ருளிலான விழா கொழும்பு பண்­டா­ர­நாக்க சர்­வ­தேச மாநாட்டு மண்­ட­பத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்­றது. இதன்­போது சிவ­ராஜா திலீபன் மேடைக்கு அழைத்து வரப்­பட்டார். அப்­போது ஜனாதிபதி சிவராஜாவுக்கு கைகொடுத்து அவரது தலையை தடவி தனது மன்னிப்பை வழங்கினார்.