கத்தாரில் நடைபெற்ற மாபெரும் சித்திரை திருநாள் கொண்டாட நிகழ்வு

Published By: Digital Desk 7

01 May, 2024 | 12:06 PM
image

கத்தார் தமிழர் சங்கம் பெருமையுடன் வழங்கிய சித்திரை திருநாள் இசை மேடைக் கொண்டாட்ட நிகழ்வுகள் கடந்த 25ம் திகதி மாலை 6 மணிக்கு கத்தார் தேசிய மாநாட்டு மையத்தில் மிகச் சிறப்பாக இடம் பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கத்தாருக்கான இந்திய தூதுவர் விபுல் , சிறப்பு அதிதிகளாக கத்தார் நாட்டின் உயர் அதிகாரிகள், கத்தாரில் உள்ள முக்கியஸ்தர்கள், கத்தாரில் உள்ள தமிழ் அமைப்புகளின் உறுப்பினர்கள் என பலறும் கலந்து சிறப்பித்தனர்.

நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் இந்திய நாட்டின் பிரபல கலைஞர்களான விஜய் டிவி சூப்பர் சிங்கர்ஸ் ஸ்ரீ நிஷா, பிரியா ஜெர்சன், திவாகர், ஸ்ரீதர் சேனா, மணி அண்ட் பேண்ட் குழுவினர், கலக்கப் போவது யாரு பாலா, கார்த்திக் தேவராஜன், வினோத், விக்னேஷ் நிகழ்ச்சி தொகுப்பாளராக பல் குரல் கலைஞர் ஆதவன் ஆகியோர் கலந்து கொண்டு சித்திரை திருநாள் கொண்டாட்டத்தினை வழங்கினர்.

மேலும் இந்நிகழ்ச்சியை பார்வையிட ஏராளமான இந்திய மற்றும் இலங்கை தமிழ் மக்கள் என 2500க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்