காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 2 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட 28 வயதுடைய நபரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிவான் செவ்வாய்க்கிழமை (30) உத்தரவிட்டார்.
கைதுசெய்யப்பட்டவர் திருமணம் முடித்து ஒரு பிள்ளையின் தந்தை என்பதுடன் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருபவராவார்.
இவர் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டு கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளதுடன் 3 வழக்குகளுக்கான நீதிமன்ற பிடிவிறாந்தும் இவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் 14 வயது 7 மாதம் கொண்ட சிறுமியை காதலித்து திருமணம் செய்வதாக தெரிவித்து சிறுமியை கடந்த மாதம் 10 ஆம் திகதி பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி செய்த முறைப்பாட்டுக்கமைய திங்கட்கிழமை (29) குறித்த நபரை 2 மில்லிக்கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்த பொலிஸார், பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட நபரை செவ்வாய்க்கிழமை (30) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அவரை எதிர்வரும் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM