(எம்.சி.நஜிமுதீன்)
தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் விளம்பரங்களுக்கு நான் பொறுப்பாக முடியாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் அமையப்பெற்றுள்ள பாரிய ஊழல் மோசடி குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் வாக்குமூலம் வழங்குவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அங்கு சென்று வாக்குமூலம் வழங்கினார்.
வாக்குமூலம் வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தொலைக்காட்சி நிறுவனங்கள் நாள்தோறும் ஒவ்வொரு நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருக்கின்றன. தற்போதும் காலை மாலை என்று பாராது பல அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. அதேபோல் கடந்த காலங்களிலும் ஒளிபரப்பாகியிருக்கலாம். ஆகவே அவ்வாறனவற்றுக்கு நான் பொறுப்பாக முடியாது.
2015 ஆம் ஆண்டு தேர்தல் காலத்தில் அரச தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய தேர்தல் விளம்பரம் தொடர்பில் இதற்கு முன்னரும் பாரிய ஊழல் மோசடி குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு என்னிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டது. மற்றுமொரு அரச தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பாகிய தேர்தல் விளம்பரம் தொடர்பில் இன்றும் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. தொடர்ந்தும் இவ்வாறான முறைப்பாடுகளை முன்வைத்து விசாரணை நடத்தலாம். இருந்தபோதிலும் இது பற்றி நான் அலட்டிக்கொள்ளப்போவதுமில்லை.
ஆயினும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக நான் அரச ஊடகங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தவில்லை. தேர்தல் காலங்களில் ஊடகங்களில் பல்வேறுபட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. எனவே அவை அனைத்திற்கும் நாம் பொறுப்புக்கூற வேண்டிய அவசியம் இல்லை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM