சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை கற்பிக்க தனியான கல்வி பிரிவுகள் :  சந்திரிகா குமாரதுங்க 

Published By: Ponmalar

24 Mar, 2017 | 07:32 PM
image

(க.கமலநாதன்)

மாணவர்களிடையே ஓருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் போன்ற பண்புகளை வளர்பதை நோக்கமாகக் கொண்டு புதிய கல்விப் பிரிவொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் நல்லிணக்க செயலணியின் தலைவருமான சந்திரிகா பண்டாரநாயக்க தெரிவித்தார்.

பண்டாராநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்தில்ப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாணவர்களிடையே ஓருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் போன்ற பண்புகளை வளர்பதை நோக்கமாகக் கொண்டு புதிய கல்விப் பிரிவொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. நல்லிணக்க செயளணி மற்றும் கல்வி அமைச்சின்  புதிய திட்டத்தின் கீழ் இதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இதனூடாக இன்றைய சமதாயத்தில் ஏற்பட்டுள்ள பெரும் சவாலான சூழ்நிலைகளை ஒற்றுமையுடன் இருந்து சமாளிக்கின்ற ஒரு எதிர்கால சந்தியினை உருவாக்குவதே பிரதான நோக்கமாக உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் சகோதரத்துவ பாடசாலை அமைப்பு பணிகள், சமய ரீதியிலான நிகழ்வுகள், ஆசிரியர்களுக்கான விசேட பயிற்சிகள், உள்ளிட்டவை வழங்கப்ட்டதன் பின்னர் பாடசாலைகளின் உள்ளேயும் இத்திட்டம் கொண்டுவரப்படவுள்ளது.

அதேபோல தற்போதும் கல்வி சார்ந்த பல பிரச்சினைகள் உள்ளன. இந்த பிரச்சினைகளை களைய இன்னும் பல தலைமுறைகளை நாம் கடக்க வேண்டியிருக்கும் அதற்கு அடித்தளம் இடும் வகையிலான கல்வி மறுசீரமைப்பு செயற்பாடுகளை முன்னெடுப்பது குறித்தே தற்போது நாம் அவதானம் செலுத்த வேண்டும்.

மேலும் இன்று வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள் பாடசாலைகளுக்கும் மற்றைய பாடசாலைகளுக்குமான வள பகிர்வு செயற்பாடுகள் சமாந்தர தன்மையுடன் முன்னெடுக்கப்படுகின்றன. இவை கடந்த காலங்களில் இடம்பெறவில்லை. அரசியலை விடுத்து பார்கின்ற போதும் கடந்த காலங்களுடன் ஒப்பீட்டளவில் பார்கின்ற போது தற்போது கல்வி வளர்சி குன்றியுள்ளது அதனை மறுசீரமைக்க நாம் சகலரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02