(எம்.ஆர்.எம்.வசீம்)
ஏனைய அரசியல் கட்சிகள் அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்கான அடித்தளத்தை சரி செய்து கொள்ளும் நோக்கில் இன்றைய தினம் மே தினத்தை கொண்டாடுகின்ற நிலையில், வீழ்ந்த நாட்டை கட்டியெழுப்ப உதவிய உழைக்கும் மக்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் மீண்டும் விழாத கெளரவமான நாடு எனும் தொனிப்பொருளில் ஐக்கிய தேசிய கட்சி மே தினத்தை ஏற்பாடு செய்திருக்கிறது என கட்சியின் பிரதித் தலைவர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை (30) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
வீழந்த நாடொன்றை கட்டியெழுப்புவது என்பது சாதாரண விடயம் அல்ல. என்றாலும் ரணில் விக்ரமசிங்க இந்த நாடு வீழ்ச்சியடைந்து செல்லாது பாதுகாத்து வந்தார். அதனால்தான் அனைத்து கட்சிகளுக்கும் பாரிய மே தின கூட்டங்களை ஏற்பாடு செய்ய முடியுமான சூழலை ஏற்படுத்தி இருக்கிறது. அதேபோன்று நாடொன்றை அபிவிருத்தி அடையச் செய்வது என்பது இதனையும்விட பாரிய விடயம்.
ஐக்கிய தேசிய கட்சியும் அதன் தலைமைத்துவமும் எப்போதும் கொள்கையில் உறுதியாக இருந்தது. தேர்தலில் நாங்கள் வெற்றிபெற்றாலும் தோலியடைந்தாலும் கொள்கையை மீறி செயற்படவில்லை. அதனாலே இன்று எமது கொள்கை வெற்றி பெற்றிருக்கிறது. கட்டியெழுப்பி இருக்கும் நாட்டை தொடர்ந்து பாதுகாத்து கொண்டு செல்வது இலகுவான விடயமல்ல, அதனை கைவிட்டால், மக்கள் மீண்டும் பாதளத்துக்கே வீழ்ந்துவிடுவார்கள்.
அதனால் படிப்படியாக மக்களுக்கு நிவாரணங்களை வழங்கி மக்களை வாழவைக்க ரணில் விக்ரமசிங்க பாரிய முயற்சியை எடுத்து வருகிறார். இதற்காக மக்கள் பாரிய அர்ப்பணிப்பை செய்தார்கள். நாட்டை கட்டியெழுப்பும் பணிக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்காவிட்டாலும் உழைக்கும் மக்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாலே நாடு இந்த நிலைக்கு வர முடியுமாகி இருக்கிறது.
அதனால் நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு, பொருளாதார, சமூக ரீதியாக நாட்டை கட்டியெழுப்ப முடியுமான ஒரே கட்சி ஐக்கிய தேசியாகும். அதனால் நாடு தொடர்பில் சரியான தீர்மானம் மேற்கொள்ளும் எமது மேதின கூட்டத்தில் கலந்துகொண்டு, நாட்டை கட்டியெழுப்பும் ரணில் விக்ரமசிங்கவின் கரங்களை பலப்படுத்த வேண்டும். எனவே கொழும்பு மாளிகாவத்தையில் பிற்பகல் 2மணிக்கும் ஆரம்பமாகும் எமது கூட்டத்தில் கலந்துகொண்டு எமது பலத்தை நாட்டுக்கு காட்ட அணிதிறளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM