ஆசிய றக்பி முதலாம் பிரிவு அரை இறுதியில் கஸக்ஸ்தானுக்கு இறுக்கமான வெற்றி

Published By: Vishnu

30 Apr, 2024 | 10:31 PM
image

(நெவில் அன்தனி)

கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் செவ்வாய்க்கிழமை (30) மாலை நடைபெற்ற ஆசிய றப்பி முதலாம் பிரிவு அரை இறுதிப் போட்டியில் கத்தாரிடம் கடும் சவாலை எதிர்கொண்ட கஸக்ஸ்தான் 33 (5 ட்ரைகள், 4 கொன்வேர்ஷன்கள்) - 31 (3 ட்ரைகள், ஒரு பெனல்டி ட்ரை, 3 கொன்வேர்ஷன்கள்) என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் மிகவும் இறுக்கமான வெற்றியை ஈட்டியது.

இடி முழக்கத்துடன் கடும் மழை பெய்ததால் பிற்பகல் 4.00 மணிக்கு ஆரம்பமாக வேண்டிய போட்டி சுமார் ஒரு மணி நேரம் கழித்தே ஆரம்பமானது.

மழை காரணமாக மைதானம் வழுக்கும் தன்மையைக் கொண்டிருந்ததுடன் ஆங்காங்கே சகதியாக இருந்ததால் இரண்டு அணியினரும் கடும் சிரமத்திற்கு மத்தியிலேயே விளையாடினர்.

எனினும் போட்டி ஆரம்பித்து சொற்ப நேரத்தில் கத்தார் முதலாவது புள்ளிகளைப் பெற கஸக்ஸ்தான் உடனடியாகவே பதிலடி கொடுத்தது.

கஸக்ஸ்தான் வீரர் ஒருவர் விதிகளுக்கு முரணாக விளையாடியதால் கத்தாருக்கு மத்தியஸ்தரினால் பெனல்டி கோல் வழங்கப்பட்டது.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய கத்தார் இடைவேளையின்போது 21 - 14 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தது.

இடைவேளைக்கு பின்னர் கத்தார் தொடர்ந்து திறமையாக விளையாடி 56ஆவது நிமிடத்தில்   28 - 19 என முன்னிலையில் இருந்தது.

8 நிமிடங்கள் கழித்து பெனல்டி ஒன்றின் மூலம் புள்ளிகள் நிலையை கத்தார் 31 - 19 என ஆக்கியது.

ஆனால், அடுத்த இரண்டு நிமிடங்களில் 2 ட்ரைகளை வைத்து அதற்கான மேலதிகப் புள்ளிகளையும் பெற்ற கஸக்ஸ்தான் 33 - 31 என முன்னிலை பெற்று கடைசிவரை புள்ளிகள் நிலையை அப்படியே தக்கவைத்து 2 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

கஸக்ஸ்தான் சார்பாக க்றிகோரிவ் லிட்வினோவ், அலெக்ஸாண்டர் லய்மா, ரோமன் சேர்பக்காவ், மெக்ஸிம் பெட்டுக்கோவ், அப்துரக்மான் நஸிபயேவ் ஆகியோர் தலா ஒரு ட்ரை வைத்ததுடன் அவற்றில் 4 ட்ரைகளுக்கான மேலதிகப் புள்ளிகளை அப்துரக்மான் நஸிபயேவ் பெற்றுக்கொடுத்தார்.

கத்தாருக்கு ஒரு பெனல்டி கோல் கிடைத்ததுடன் வேட் லொட்டர், ஜொஹான் ஹென்றி, இலிசா ரக்காபு ஆகியோர் ட்ரைகளை வைத்தனர். 3 ட்ரைகளுக்கான மேலதிகப் புள்ளிளையும் பெனல்டி புள்ளிகளையும் ப்றூக் ட்ரிமேன் பெற்றுக்கொடுத்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐசிசி அங்குரார்ப்பண மகளிர் சவால் கிண்ண...

2026-04-17 18:02:57
news-image

19 வயதுக்குட்பட்ட பெண்கள் மும்முனை ரி20...

2026-04-17 16:33:18
news-image

குவின்டன்  டி கொக் குவித்த அபார...

2026-04-17 05:47:10
news-image

பங்களாதேஷ் செல்லவுள்ள இலங்கை மகளிர் குழாம்...

2026-04-16 19:06:39
news-image

நியூஸிலாந்து ஏ அணியுடனான உத்தியோகப்பற்றற்ற டெஸ்டில்...

2026-04-16 18:55:58
news-image

இலங்கை விளையாட்டுத்துறையில் பெண்களுக்கு தேசிய ஒலிம்பிக்...

2026-04-16 16:27:53
news-image

பெங்களூருவின் பந்துவீச்சில் சரிந்தது லக்னோவ்; அணிகள்...

2026-04-15 23:47:23
news-image

108ஆவது அகில இங்கிலாந்து சிரேஷ்ட (மாஸ்டர்ஸ்)...

2026-04-15 17:22:54
news-image

ஒன்பது விஸ்டன் விருதுகளில் ஏழு விருதுகளை...

2026-04-15 16:39:56
news-image

உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் வீரர்கள்...

2026-04-15 14:40:20
news-image

நூர் அஹ்மதின் துல்லிய பந்துவீச்சின் உதவியுடன்...

2026-04-15 00:09:03
news-image

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் தடுமாறிய ராஜஸ்தான் றோயல்ஸ்...

2026-04-14 03:51:27