இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கக்கூடிய அர்த்தமுள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவு - கனேடிய உயர்ஸ்தானிகராலயம்

Published By: Vishnu

30 Apr, 2024 | 09:28 PM
image

(நமது நிருபர்)

இலங்கையில் நீதி, பொறுப்புக்கூறல், சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு வழிவகுக்கக்கூடிய அர்த்தமுள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக கொழும்பிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

கனடாவிலுள்ள ப்ரம்டன் நகரில் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் தமிழினப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் வகையிலான சின்னமொன்றை நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து இலங்கை அரசாங்கம் கொழும்பிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகரை வரவழைத்து கலந்துரையாடியதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.

அதன்படி இந்நினைவுச்சின்னம் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கிலான சந்திப்பொன்று கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷுக்கும், வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தனவுக்கும் இடையில் இடம்பெற்றதாக கொழும்பிலுள்ள கனேடிய உயர்ஸ்தானிகராலயம் மின்னஞ்சல் ஊடாக தமக்கு உறுதிப்படுத்தியதாக 'தமிழ் கார்டியன்' செய்தி வெளியிட்டுள்ளது.

 அத்தோடு கனடாவின் சமஷ்டி கட்டமைப்பின்கீழ் மாகாண மற்றும் உள்ளுராட்சி அரசாங்கங்கள் மத்திய அரசாங்கத்திலிருந்து வேறுபட்டு சுதந்திரமாக இயங்கமுடியும் எனவும், அவற்றுக்கென தனித்த நிர்வாக அதிகாரங்கள் உண்டு எனவும் கனேடிய உயர்ஸ்தானிகராலயம் அதன் மின்னஞ்சல் பதிலில் தெரிவித்திருப்பதாக 'தமிழ் கார்டியன்' செய்தியில் கூறப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தம்புள்ளையில் புதையல் தோண்டிய இளைஞன் கைது

2025-01-22 16:15:41
news-image

பேஸ்புக் கணக்கிற்குள் ஊடுருவி பண மோசடி...

2025-01-22 16:08:47
news-image

காலியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

2025-01-22 15:43:51
news-image

திருமண வயது எல்லையை பொது வயது...

2025-01-22 15:43:57
news-image

மட்டக்களப்பில் ஐஸ், கேரள கஞ்சா, கசிப்புடன்...

2025-01-22 15:31:29
news-image

சட்ட திட்டங்களினால் மாத்திரம் நாடொன்று முன்னோக்கிச்...

2025-01-22 15:31:13
news-image

ஹட்டனில் போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது

2025-01-22 15:03:10
news-image

கிளிநொச்சியில் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்த வெள்ளம்;...

2025-01-22 15:09:36
news-image

சிங்கக் குட்டிகளுக்கு பெயரிட பொதுமக்களுக்கு அரிய...

2025-01-22 14:58:50
news-image

வாய்க்காலில் வீழ்ந்து கெப் வாகனம் விபத்து

2025-01-22 14:52:38
news-image

2014 முதல் நஷ்டத்தில் இயங்கிய ஶ்ரீலங்கன்...

2025-01-22 14:32:57
news-image

பொலன்னறுவையில் காட்டு யானை தாக்கி ஒருவர்...

2025-01-22 14:28:32