மே மாதத்தில் வெளியாகும் விஜயகுமாரின் 'எலக்சன்'

Published By: Digital Desk 7

30 Apr, 2024 | 04:06 PM
image

இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி எதிர்வரும் ஜூன் நான்காம் திகதி என்று நடைபெறுகிறது.

அதன் பிறகு தான் தேர்தல் முடிவுகள் வெளியாகும். இந்நிலையில் நடிகர் விஜயகுமார் நடிப்பில் தயாராகி இருக்கும் 'எலக்சன்' எனும் திரைப்படம் மே மாதம் 17 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது என படக்குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளனர்.

இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'எலக்சன்' எனும் திரைப்படத்தின் விஜய்குமார், ப்ரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரீல் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கிறார்.

இப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று இணையத்தில் வெளியாகி ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் வெளியீடு தொடர்பான புதிய தகவல்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அந்த வகையில் மே மாதம் 17ஆம் திகதியன்று இந்த திரைப்படம் பட மாளிகையில் வெளியாகிறது.

ரசிகர்களை 'எலக்சன்' ரிசல்ட் குறித்த ஆர்வத்தை தூண்டுவதற்காக இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள், லிரிக்கல் வீடியோ, டிரைலர், ஸ்னீக் பீக் ஆகியவை தொடர்ந்து வெளியிடப்படும் என படக் குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right