ரி - 20 உலகக் கிண்ணத்துக்கான திறன்காண் போட்டிகள் - ஹசரங்க, அசலன்க, லியனகே தலைமைகளில் 3 அணிகள்

Published By: Digital Desk 7

30 Apr, 2024 | 02:14 PM
image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் கூட்டாக நடைபெறவுள்ள 9ஆவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு இலங்கை அணியைத் தெரிவு செய்வதற்கான திறன்காண்  ரி20   போட்டிகள் ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் மே 2ஆம் திகதி முதல் 11ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இந்த திறன்காண் போட்டிகளை முன்னிட்டு ரி20 அணித் தலைவர் வனிந்து ஹசரங்க தலைமையில் டீம் புளூ அணியும், ரி20 உதவி அணித் தலைவர் சரித் அசலன்க தலைமையில் டீம் ரெட் அணியும் ஜனித் லியனகே தலைமையில் டீம் க்றீன் அணியும் பெயரிடப்பட்டுள்ளன.

இந்த மூன்று அணிகளிலும் தலா 14 வீரர்கள் இடம்பெறுவதுடன் டீம் ரெட் அணியில் யாழ். வீரர் விஜயகாந்த் வியாஸ்காந்த் பெயரிடப்பட்டுள்ளார்.

இந்த 3 அணிகளும் ஒன்றையொன்று 2 தடவைகள் எதிர்த்தாடும். இதற்கு அமைய மொத்தம் 6 போட்டிகள் நடைபெறும். இந்த 6 போட்டிகள் முடிவில் ரி20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாம் தெரிவுசெய்யப்படும்.

அணிகள் விபரம்

டீம் புளூ (நீல அணி): வனிந்த ஹசரங்க (தலைவர்), பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், தனஞ்சய டி சில்வா, சதீர சமரவிக்ரம,  நுவனிது பெர்னாண்டோ, ஏஞ்சலோ மெத்யூஸ், லஹிரு மதுஷன்க, ஜெவ்றி வெண்டசே, துனித் வெல்லாலகே, அசித்த பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷன்க, லஹிரு குமார, டினுர கலுபஹன.

டீம் ரெட் (சிவப்பு அணி): சரித் அசலன்க (தலைவர்), நிரோஷன் திக்வெல்ல, அவிஷ்க பெர்னாண்டோ, கமிந்து மெண்டிஸ், அஹான் விக்ரமசிங்க, தசுன் ஷானக்க, லஹிரு சமரக்கோன், பினுர பெர்னாண்டோ, விஜயகாந்த் வியாஸ்காந்த், அக்கில தனஞ்சய, சாமத் கொமஸ், ப்ரமோத் மதுஷான், நிமேஷ் விமுக்தி, லசித் குரூஸ்புள்ளே.

டீம் க்றீன் (பச்சை அணி): ஜனித் லியனகே (தலைவர்), குசல் ஜனித், தினேஷ் சந்திமால், பானுக்க ராஜபக்ஷ, அஷேன் பண்டார, ரமேஷ் மெண்டிஸ், சஹான் ஆராச்சிகே, சாமிக்க கருணாரட்ன, தரிந்து ரத்நாயக்க, லக்ஷான் சந்தகேன், இசித்த விஜேசுந்தர, கருக்க சன்கேத், ஷெவொன் டெனியல், கசுன் ராஜித்த.

போட்டி விபரம்

மே 2: டீம் புளூ எதிர் டீம் ரெட் (இரவு 7.00 மணி)

மே 4: டீம் ரெட் எதிர் டீம் க்றீன் (இரவு 7.00 மணி)

மே 5: டீம் புளூ எதிர் டீம் க்றீன் (இரவு 7.00 மணி)

மே 8: டீம் புளூ எதிர் டீம் ரெட் (காலை 10.00 மணி)

மே 10: டீம் ரெட் எதிர் டீம் க்றீன் (காலை 10.00 மணி)

மே 11: டீம் புளூ எதிர் டிம் க்றீன் (காலை 10.00 மணி)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீரர்களின் அபார ஆற்றல்களால் இலங்கை அமோக...

2025-02-14 19:11:52
news-image

ஆஸி.யை மீண்டும் வீழ்த்தி தொடரை முழுமையாக...

2025-02-14 00:18:39
news-image

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய பாகிஸ்தானியர்...

2025-02-13 19:28:02
news-image

கில் அபார சதம், கொஹ்லி, ஐயர்...

2025-02-13 18:17:21
news-image

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண சிறப்பு தூதுவர்களாக...

2025-02-13 17:23:02
news-image

மாலைதீவில் கராத்தே பயிற்சி மற்றும் தேர்வு

2025-02-13 10:26:53
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே பயிற்சி பாசறை

2025-02-13 10:43:37
news-image

சரித் அசலன்க சதம் குவித்து அசத்தல்;...

2025-02-12 18:57:16
news-image

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்குப் பின்னர் குனேமானின்...

2025-02-12 12:02:33
news-image

உலகக் கிண்ணத்துக்கு சிறந்த அணியை கட்டியெழுப்புவதை...

2025-02-11 19:22:29
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை...

2025-02-11 09:21:46
news-image

ரோஹித் ஷர்மா 32ஆவது ஒருநாள் சதம்...

2025-02-10 12:42:11