70 இலட்சம் ரூபா பெறுமதியான பீடி இலைகளுடன் 3 வயது சிறுவன் உள்ளிட்ட நால்வர் கைது

30 Apr, 2024 | 02:10 PM
image

இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட எழுபது இலட்சம் ரூபா பெறுமதியான 1346 கிலோ பீடி இலைகளுடன் நான்கு சந்தேக நபர்கள் இன்று (30) கைது செய்யப்பட்டுள்ளனர் . 

கல்பிட்டி பொலிஸ்  நிலையத்திற்கு கிடைத்த  இரகசிய தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் . 

இவர்களிடமிருந்து, 42 பொதிகளில் பொதி செய்யப்பட்ட பீடி இலைகள் , இவற்றைக் கடல் மார்க்கமாக ஏற்றிச் சென்ற படகு, தரைவழி போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்பட்ட  லொறி என்பன  கைப்பற்றப்பட்டுள்ளன. 

வவுனியா பிரதேசத்தை சேர்ந்த 03 வயதுடைய சிறுவன் , கல்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன்,  ஜனசவிபுர பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய இரண்டு இளைஞர்கள் ஆகியோர் கைதானவர்களில் அடங்குவர். 

காலம் காலமாக  இந்தியாவிலிருந்து கல்பிட்டி கடல் வழியாகப்  பீடி  இலைகள் இலங்கைக்கு கொண்டு வரப்படுவதன் காரணமாக ஆண்டுக்கு கோடிக்கணக்கான சுங்க வரிகளை நாடு இழக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது . 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நெருக்கடியை கண்டு ஓடிப்போகும் தலைவர்களால் நாட்டுக்கு...

2024-06-23 17:56:58
news-image

ஊடகவியலாளரின் வீட்டை தாக்கியவர்களும் அதை செய்வித்தவர்களும்...

2024-06-23 17:41:47
news-image

விவசாயிகளின் வாழ்க்கையில் புதிய மாற்றம் ஏற்படும்...

2024-06-23 17:35:46
news-image

புதிய காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாசல்...

2024-06-23 18:07:07
news-image

நாளை சகல பாடசாலைகளும் வழமை போன்று...

2024-06-23 16:46:21
news-image

யாழில் கையடக்க தொலைபேசி திருட்டு :...

2024-06-23 16:32:11
news-image

வவுனியாவில் 3 வயது சிறுமிக்கு பாலியல்...

2024-06-23 16:24:05
news-image

'ஸ்கோலியோசிஸ்' பற்றி பொது விழிப்புணர்வுக்காக சுகாதார...

2024-06-23 15:39:01
news-image

யாழ். இளைஞனிடம் 80 இலட்சம் ரூபாய்...

2024-06-23 15:24:01
news-image

13 குறித்து பேச ஜே.வி.பிக்கு அருகதையில்லை...

2024-06-23 14:11:40
news-image

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் எட்டு ஆண்டுகளில் 3.416...

2024-06-23 14:06:25
news-image

அனுமதியின்றி இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட 6...

2024-06-23 13:11:57