இலங்கை SOS சிறுவர் கிராமங்கள் One Galle Face Mall இல் ‘SOS Wonder Village’ஐ வெளிப்படுத்தியிருந்தது

30 Apr, 2024 | 11:58 AM
image

கொழும்பு One Galle Face Mall உடன் கைகோர்த்து இலங்கை SOS சிறுவர் கிராமங்கள், SOS Wonder Village நிகழ்வை முன்னெடுத்திருந்தது.

தேவைகளைக் கொண்ட சிறுவர்களின் நலனுக்காக நிதி திரட்டுவது மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கையாக இது அமைந்திருந்தது.

SOS Wonder Village நிகழ்வு கொழும்பிலுள்ள One Galle Face Mall இல் மார்ச் மாதம் நடுப்பகுதி முதல் ஏப்ரல் வாரம் முற்பகுதி வரை வார இறுதி நாட்களில் நான்காம் மாடியிலுள்ள Playscape பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த காலப்பகுதியில், 1000 க்கும் அதிகமான சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் SOS Wonder Village இல் இணைந்து, களிப்பான விநோத அம்சங்களில் பங்கேற்றிருந்தனர்.

இந்த நிகழ்வில் பங்கேற்றிருந்ததனூடாக விநோத அம்சங்களை அனுபவித்தது மட்டுமன்றி, சிறுவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான பங்களிப்புகளையும் வழங்கியிருந்தனர்.

சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் வயது வந்தவர்களுக்கான வர்ணம் பூசும் அமர்வுகளை விருந்தினர்கள் அனுபவித்திருந்தனர்.

சிங்கிதி அவுருது குமார மற்றும் குமாரிய தெரிவும் நடைபெற்றது. பல உள்ளக விளையாட்டுகளும் முன்னெடுக்கப்பட்டன. இந்த விளையாட்டுகளில் பங்கேற்று வெற்றியீட்டியவர்களுக்கு பெறுமதியான பரிசுகளும் வழங்கப்பட்டன.

SOS சிறுவர் கிராமத்தைச் சேர்ந்த சிறுவர்களுக்கு மாதாந்த அல்லது வருடாந்த செலவுகளுக்கான தொகையை அனுசரணை வழங்குவதற்கான வாய்ப்பு பங்குபற்றுநர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

இந்தத் தொகை சிறுவரின் கல்வி மற்றும் வாழ்க்கைச் செலவுகளை ஈடு செய்ய பயன்படுத்தப்படும். மேலும், சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் பயில்வதற்கு பங்குபற்றுநர்களுக்கு வாய்ப்பு கிடைத்ததுடன், சிறுவர் வீடியோக்கள், கார்டூன்கள் மற்றும் பாடல்களை அனுபவிப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

இலங்கை SOS சிறுவர் கிராமங்களின் தேசிய பணிப்பாளர் திவாகர் ரட்னதுரை இந்தத் திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கை SOS சிறுவர் கிராமங்களில், பெற்றோரின் அரவணைப்பை இழந்த அல்லது இழக்கும் அவதானத்தை எதிர்கொண்டுள்ள சிறுவர்களுக்கு அரவணைப்பான குடும்ப சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது எமது நோக்கமாகும். SOS Wonder Village நிகழ்வினூடாக நிதி திரட்ட மாத்திரம் நாம் எதிர்பார்க்காமல், சிறுவர் பாதுகாப்பின் முக்கியத்துவம் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்த பின்தங்கிய சிறுவர்களின் தேவைகளுக்கு ஆதரவளிக்கவும் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

SOS சிறுவர் கிராமங்கள் 42 வருடங்களுக்கு மேலாக உறுதியான, குடும்பத்தைப் போன்ற சூழலை சிறுவர்களுக்கு வழங்குகின்றது. 6 சிறுவர் கிராமங்களில் 800 க்கும் அதிகமான சிறுவர்களுக்கு அரவணைப்பை வழங்கி வருகின்றது. பெற்றோரின் அரவணைப்பை இழக்கும் இடரை எதிர்நோக்கியுள்ள 3700 க்கும் அதிகமான சிறுவர்களுக்கு நேரடி குடும்ப வலுவூட்டல் நிகழ்ச்சியினூடாக உதவிகளை வழங்குகின்றது. 

One Galle Face இன் பணிப்பாளர் சித் சொலன்கி இந்தப் பங்காண்மை தொடர்பில் குறிப்பிடுகையில், “களிப்பு நிறைந்த விநோதமானநிகழ்வை முன்னெடுப்பதற்காக இலங்கை SOS சிறுவர் கிராமங்களுடன் கைகோர்த்ததையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். One Galle Face மற்றும் ஷங்கிரி-லா குழுமம் ஆகியன “நல்லதை செய்வது” எனும் நம்பிக்கையின் பிரகாரம் செயற்படுகின்றன.

எமது சமூகத்தில் நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்க நாம் எதிர்பார்க்கின்றோம். SOS Wonder Village என்பது தேவைகளைக் கொண்ட பல சிறுவர்களுக்கு கல்வியை அணுகும் வாய்ப்பு மற்றும் இதர வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுத்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தக்கூடிய வகையில் அமைந்துள்ளது என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.” என்றார்.

SOS Wonder Village இல் பங்கேற்று அர்த்தமுள்ள வகையில் பங்களிப்பு வழங்கியிருந்த அனைவருக்கும் இலங்கை SOS சிறுவர் கிராமங்கள் நன்றி தெரிவிக்கின்றது.

இலங்கை SOS சிறுவர் கிராமங்கள் மற்றும் SOS Wonder Village நிகழ்வு பற்றிய மேலதிக தகவல்களை பெற்றுக் கொள்ள https://www.soschildrensvillages.lk/ எனும் இணையத்தளத்தைப் பார்க்கவும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right