உரகஸ்மன்ஹந்திய, ரன்தொட்டுவில பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபரொருவர் கத்தியால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று (30) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
ரன்தொட்டுவில பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயது நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 24 வயதுடைய திருமணமான பெண்ணொருவருடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நிலையில், இவர் இன்று (30) அதிகாலை குறித்த பெண்ணை சந்திப்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இதன்போது, சம்பவ இடத்திற்குச் சென்ற சந்தேக நபரான பெண்ணின் கணவர், தனது மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த நபரின் தலையில் கத்தியால் பலமாக தாக்கியுள்ளார்.
காயமடைந்தவர் உரகஸ்மன்ஹந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் உரகஸ்மன்ஹந்திய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM