முல்லைத்தீவிலிருந்து பேருவளை மற்றும் கல்முனைக்கு இரண்டு லொறிகளில் நெல் கொண்டு செல்வதாக கூறி மாடுகளை ஏற்றிச் சென்ற ஏழு பேர் வவுனியா நகரில் 44 மாடுகளுடன் நேற்று திங்கட்கிழமை (29) கைது செய்யப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா பொலிஸ் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் நீண்டகாலமாக இந்த மாடுகளை ஏற்றிச் செல்வதாகவும், பொலன்னறுவையில் உள்ள அரிசி ஆலைகளுக்கு நெல் கொண்டு செல்லும் போர்வையில் பக்க வீதிகளை பயன்படுத்தி மாடுகளை ஏற்றிச் செல்வதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இரண்டு லொறிகளில் இருந்த பசுக்களில் பெரும்பாலானவை கருவுற்ற பசுக்கள் என்றும், சில மாடுகள் நோய்வாய்ப்பட்டவை என்றும் பாெலிசார் தெரிவித்தனர்.
வவுனியா மற்றும் முல்லைத்தீவில் மாடு கடத்தலில் ஈடுபடுபவர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து திருடப்பட்ட மாடுகளை ஏற்றிச் செல்வதும் இதன் மூலம் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கஹட்டகஸ்திகிலிய, இகிரிகொல்லாவ மற்றும் வெலிசறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸாரால் முன்னெடுத்து வருகின்றனர் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM