பாகிஸ்தானிலிருந்து இந்தியா ஊடாக இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 600 கோடி ரூபா (இலங்கை நாணயபடி) பெறுமதியான போதைப்பொருளை இந்திய கடல் எல்லையில் வைத்து அந் நாட்டு புலனாய்வு பிரிவினர் கைப்பற்றியதுடன் சந்தேகத்தின் பேரில் 14 பேரைக் கைது செய்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
“அல் ரசா” ( Al-Raza ) என்ற படகில் 600 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அதில் பயணித்த 14 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய கடலோர காவல் படையினர் தெரிவித்தனர் .
86 கிலோ போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட அனைவரும் பலுசிஸ்தான் பிரஜைகள் என இந்தியக் கடலோர காவல் படையினர் தெரிவித்தனர் .
கைது செய்யப்பட்ட அனைவரும் இந்திய குஜராத் மாநில துறைமுகம் ஒன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் .
இது தொடர்பில் அஹமதாபாத் பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவிக்கையில் இந்த போதைப்பொருள் இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட பின்னர் இலங்கைக்குக் கொண்டு செல்லப்படவிருந்தமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவித்தார் .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM