தென் சீனாவின் குவாங்சூ நகரில் சூறாவளி ; 5 பேர் பலி , 141 தொழிற்சாலை கட்டிடங்கள் சேதம்

Published By: Digital Desk 3

29 Apr, 2024 | 10:54 AM
image

தென் சீனாவில் உள்ள மிகப்பெரிய துறைமுக நகரமான குவாங்சோவில் சனிக்கிழமை (27) பிற்பகல் பாரிய சூறாவளி  தாக்கியுள்ளது.

இதன்காரணமாக குவாங்டாங் மாகாணத்  தலைநகரில் கடுமையாக மழை பெய்துவரும் நிலையில் ஆலங்கட்டி மழையினால்  ஐந்து பேர் உயிரிழந்துள்ளதோடு, 33 பேர் காயமடைந்தனர்.

மொத்தம் 141 தொழிற்சாலை கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சூறாவளி  மணிக்கு  2.8 கிலோ மீற்றர் வேகத்தில் வீசியுள்ளதோடு,  பிற்பகல் 3 மணியளவில்  அதிகபட்சமாக வினாடிக்கு 20.6 மீற்றர்  வேகத்தில் வீசியதாக குவாங்சோவின் பையுன் மாவட்டத்தில் உள்ள லியாங்டியன் கிராமத்தில் உள்ள வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.

குவாங்டாங் மாகாணத்தில் வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கி பல நகரங்களில் குறைந்தது நான்கு பேர்  உயிரிழந்ததோடு, பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர். குறைந்தது 10 பேரைக் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்கூட்டியே பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை, ஆலங்கட்டி மழை மற்றும் சூறாவளி குறித்து எச்சரிக்கைகளை வெளியிட்டப்பட்டிருந்தது.

செங்செங் மற்றும் பன்யுவின் குவாங்சோ மாவட்டங்களின் பெரியளவிலான ஆலங்கட்டி மழை பெய்து வானகங்களை சேதப்படுத்தியுள்ளது.

பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்றான குவாங்சோவின் விமான நிலையத்தில்  பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டன.

கனமழை, ஆலங்கட்டி மழை மற்றும் சூறாவளியுடன் அடுத்த ஐந்து நாட்களுக்கு மாகாணத்தில் அதிக மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குவைத் தீ விபத்தில் தமிழர் உயிரிழப்பு

2024-06-13 12:28:24
news-image

குவைத் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் பலர்...

2024-06-12 18:00:38
news-image

தமிழக பாஜகவில் மோதல்; மேடையிலேயே கண்டித்த...

2024-06-12 15:09:56
news-image

குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில்...

2024-06-12 14:53:54
news-image

ஒடிசா மாநில முதல்வராக மோகன் சரண்...

2024-06-12 20:19:49
news-image

குவைத்தில் தீவிபத்து - 35 பேர்...

2024-06-12 13:56:57
news-image

மகனிற்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை...

2024-06-12 12:55:38
news-image

இந்தியாவில் 4 வயது குழந்தைக்கு அரிய...

2024-06-12 12:36:08
news-image

போர்க்களங்களில் -உள்நாட்டு மோதல்களில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை...

2024-06-12 12:12:36
news-image

சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் இந்தியா: திபெத்தில்...

2024-06-12 11:07:26
news-image

போதைப்பொருளிற்கு அடிமையானவர் துப்பாக்கியை கொள்வனவு செய்த...

2024-06-11 21:46:47
news-image

மலாவியின் துணை ஜனாதிபதி விமானவிபத்தில் பலி

2024-06-11 17:49:44