பாடசாலை நிகழ்வொன்றில் தான் நண்பர்களே என விழித்தேன். இந்த மாணவர்கள் கூட எதிரிகள் அல்ல, நண்பர்கள். நட்பின் கரமே நீட்டப்பட்டது, பிள்ளைகளுக்கான நிலைபேறான வளமான கல்விக்கு உதவிக்கரம் நீட்டவே பாடசாலைகளில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நண்பர்களே என விழித்து பேசுவதையும் சிலர் விமர்சித்து வருகின்றனர். இனம், மதம், வர்க்கம், கட்சி, சாதி வேறுபாடின்றி 220 இலட்சம் மக்களும் எனது நண்பர்களே, இவ்வாறே நான் பார்க்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 166 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், கம்பஹா, அத்தனகல்ல, ஊராபொல மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஏப்ரல் 27 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்நிகழ்வில், பாடசாலையின் இதர தேவைகளைக்காக ஒரு இலட்சம் ரூபா நிதியை பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினரிடம் நன்கொடையாக வழங்கி வைத்தார்.
வாக்குகளை சுருட்டிக்கொள்வதற்காகவே சிங்களம் மட்டும், தமிழ் மட்டும் என கூறி பிரிவினைகளை தோற்றுவிக்க முனைகின்றனர். இந்த பொய்களை நம்பி ஏமாந்து விட வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பொய்யான தீவிரவாத அரசியலை முன்னிலைப்படுத்தி, பாடசாலை, பல்கலைக்கழகங்கள், நூலகங்களை எரித்த காலம் இருந்தது. மீண்டும் இத்தகையதொரு காலம் எமக்கு தேவையில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM